கொன்னப்ப பாகவதர்

தமிழ்த் திரைப்பட நடிகர்

கொன்னப்ப பாகவதர் அல்லது ஹொன்னப்ப பாகவதர் (கன்னடம்: ಹೊನ್ನಪ್ಪ ಭಾಗವತರು, 1915 -1992), கர்நாடகம் மாநிலத்தில், பெங்களூருக்கு அருகே உள்ள (நெலமங்கலா), சௌட சந்திரா கிராமத்தில் பிறந்த கருநாடக இசை மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர். நல்ல உடல் வளமும் குரல் வளமும் கொண்ட தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர், சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[1][2]

ஹொன்னப்ப பாகதவர்
Honnappa Bhagavathar 1948.jpg
1948 இல் ஹொன்னப்ப பாகவதர்
பிறப்புசனவரி 14, 1915(1915-01-14)
சௌடசந்திரா (நெலமங்களா) பெங்களூர்
இறப்பு2 அக்டோபர் 1992(1992-10-02) (அகவை 77)
பெங்களூர்,கர்நாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்கான கலாபூஷணம், கான கலா, கந்தர்வ கான கலாநிதி, கான அபிநய சந்திரா, நாட்டியாசார்யா
பணிநடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், நாடகக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1935–1992
பெற்றோர்சிக்கலிங்கப்பா, காளியம்மா
பிள்ளைகள்2 மகன்கள், 5 மகள்கள்

1930ஆம் ஆண்டில் "குப்பா ஸ்ரீ சென்ன பசவேஸ்வரா நாடகக் குழு"வில் சேர்ந்து சரித்திர, சமூக நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் பாடி நடித்தார்.

1937-ஆம் ஆண்டில் தமிழ்நாடு, சேலத்தில் இருந்த சேலம் சங்கீத ரசிகர்கள் சபா இவருக்கு பாகவதர் பட்டத்தை வழங்கியது. தியாகராஜ பாகவதருடன் தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகராகவும், கதாநாயகராகவும் நடித்துள்ளார். பண்டரி பாய் மற்றும் சரோஜா தேவியை முதலில் கன்னட திரைப்படங்களில் அறிமுகம் செய்த இவர், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை உருவாக்கியுள்ளார். 1960ஆம் ஆண்டில் உமா மகேஸ்வரா நாடகக்குழுவைத் துவக்கி பல கன்னட மொழி நாடகங்களை நடத்தினார்.[3]

நடித்த திரைப்படங்கள்தொகு

ஹொன்னப்ப பாகவதர் நடித்த சில திரைப்படங்கள்.[4][5]

தமிழ்த் திரைப்படங்கள்தொகு

 1. அம்பிகாபதி(1937)
 2. கிருஷ்ணகுமார்
 3. ரதி சுகன்யா
 4. அருந்ததி (1943)
 5. வால்மீகி (1946)
 6. ஸ்ரீமுருகன் (1944)
 7. குணசாகரி
 8. தேவமனோகரி
 9. பர்மா ராணி (1945)
 10. பக்தகும்பாரா (1947)
 11. மகாகவி காளிதாசா (1959) (தேசிய விருது பெற்ற திரைப்படம்)
 12. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

கன்னட மொழி திரைப்படங்கள்தொகு

 1. மகாகவி காளிதாசா (1955)
 2. பஞ்சரத்னா (1956)
 3. ஜெகஜோதி பசவேஸ்வரா (1959)
 4. ஹேமரெட்டி மல்லம்மா
 5. சுபத்திரா (1941) (தயாரிப்பு மற்றும் நடிப்பு)
 6. சதானந்தா (1977) (தயாரிப்பு மற்றும் நடிப்பு)

விருதுகள்தொகு

 1. பாகவதர் பட்டம் (1937) சேலம் கர்நாடக இசை ரசிகர்கள் மன்றம்
 2. சிறந்த நடிகர் விருது (1956), சென்னை திரைப்பட ரசிகர்கள் சங்கம்
 3. நாட்டியாச்சார்யா விருது
 4. கர்ண சிகாமணி தங்கப்பதக்கம் (1976), வழங்கியவர்: சிருங்கேரி மட சங்கராச்சாரி
 5. கர்நாடக சங்கீத நாடக அகாதமி விருது (1972)
 6. மத்திய சங்கீத நாடக அகாதெமி விருது (1979)
 7. ராஜயோத்சவா விருது (1986) கர்நாடக அரசு வழங்கியது.

மேற்கோள்கள்தொகு

 1. "Sri Murugan Movie 1944". 2009-05-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-03 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Down the Melody lane". 2013-10-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-03 அன்று பார்க்கப்பட்டது.
 3. நூற்றாண்டு கண்ட ஹொன்னப்ப பாகவதர்
 4. "Honnappa Bhagavatar Filmography". 2012-07-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-03 அன்று பார்க்கப்பட்டது.
 5. Honnappa Bhagavathar Filmography in Tamil

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்னப்ப_பாகவதர்&oldid=3551913" இருந்து மீள்விக்கப்பட்டது