பர்மா ராணி
பர்மா ராணி (Burma Rani) 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். டி. ஆர். சுந்தரத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், கே. எல். வி. வசந்தா, செருக்களத்தூர் சாமா, டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை கோவை மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டனர்.
பர்மா ராணி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | மாடர்ன் தியேட்டர்ஸ் |
நடிப்பு | ஹொன்னப்ப பாகவதர், கே. எல். வி. வசந்தா, செருக்களத்தூர் சாமா, கே. கே. பெருமாள், டி. எஸ். பாலையா, எஸ். வி. சகஸ்ரநாமம், ஏ. தசரதராவ், எஸ். ஆர். சாண்டோ, என். எஸ். கிருஷ்ணன், காளி என். ரத்னம், வி. எம். ஏழுமலை, எம். ஈ. மாதவன், டி. ஏ. மதுரம், சி. டி. ராஜகாந்தம், மாத்தா, மேரி, கே. எஸ். சரோஜினி, வரலட்சுமி, மீனாபாய், ராஜம், சரோஜா, ராஜேஸ்வரி |
வெளியீடு | 1945 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படை வீரன் கப்டன் குமார் (ஹொன்னப்ப பாகவதர்) சப்பானியர் ஆக்கிரமித்த பர்மாவில் விமானத்தாக்குதல் நடத்தும் போது விமானம் பழுதடைய, குமார் தனது சகாக்களுடன் பாரசூட்டில் இறங்கி மாறு உடையில், சப்பானிய சிப்பாய்களை ஏமாற்றி ரங்கூன் பையா கோவிலை அடைகிறான். தனது நண்பரான பெரியபொங்கியிடம், குண்டுராவையும் (சகஸ்ரநாமம்), சோனியையும் (தசரதராவ்) இரகசியமாக ஒளித்து வைத்து விட்டுத் தன்னைப் பின்தொடர்ந்த வேவுகாரனை ஏமாற்றி விட்டு ஒரு வீட்டு மாடி சாளரம் வழியாக உள்ளே குதிக்கிறான்.[1]
அந்த வீட்டுக்கு உரியவரான பர்மிய அமைச்சர் ஊசோவின் (கே. கே. பெருமாள்) மகள் ராணி (கே. எல். வி. வசந்தா) குமாரிடம் அனுதாபம் கொண்டு, தகப்பனுக்குத் தெரியாமல் அவனை மறைத்து வைக்கிறாள். ராணி ஒரு இந்தியப் பெண்ணென்றும், சப்பானிய பொம்மை அரசாங்கத்தின் அமைச்சர் ஊசோவினால் வளர்க்கப்படுகிறவள் என்றும் தெரிந்து கொள்ளுகிறான் குமார். ராணிக்கு குமாரிடமிருந்த அனுதாபம் காதலாக மாறுகிறது.[1]
சப்பானியச் சக்கரவர்த்தியின் பிறந்த நாள் விழாவிற்காக சப்பானிய இராணுவத் தளபதி பச்சினாவின் தூண்டுதலால் ராணியின் நடனம் இடம்பெறுகிறது. ராணியின் மீது மோகம் கொண்ட பச்சினா, ராணி வீட்டில் இருக்கும் போது பலாத்காரம் செய்ய முயலுகையில் ஊசோ அவனைக் கண்டிக்கிறான். பச்சினா கோபமடைந்து போகிறான். பிறகு பச்சினா, ஏழரை லட்சம் அரிசி மூட்டைகளை டோக்கியோவுக்கு அனுப்பும் உத்தரவில் ஊசோ கையெழுத்திட மறுத்த குற்றத்திற்காக சிறையிலடைத்து விட்டு சப்பானியச் சக்கரவர்த்தியின் அழைப்பின் பேரில் ஊசோ டோக்கியோவுக்குப் பயணமானார் என்ற பொய்ச் செய்தியை ஒலிபரப்புச் செய்து தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான். எவ்வளவு இம்சை செய்தும், ஒற்றர்களின் இருப்பிடத்தை சொல்லாத ரஞ்சித்சிங் (பாலையா) என்ற இந்திய ஒற்றனை மறுநாள் காலை சுட்டுவிடும்படி உத்தரவிடுகிறான். இச்செய்தியைக் கேட்ட குமார், ரஞ்சித் மூலம் ஒற்றர் தலைவைன் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளலாமென்று ராணியை பொங்கியிடம் அனுப்புகிறான்.[1]
நடிக, நடிகையர்
தொகுநடிகர் | பாத்திரம் |
---|---|
ஹொன்னப்ப பாகவதர் | குமார் |
செருக்களத்தூர் சாமா | பௌத்த பிக்கு |
கே. கே. பெருமாள் | ஊசோ |
டி. எஸ். பாலையா | ரஞ்சித்சிங் |
எஸ். வி. சகஸ்ரநாமம் | குண்டுராவ் |
ஏ. தசரதராவ் | சோனி |
எஸ். ஆர். சாண்டோ | கோட்டோ |
என். எஸ். கிருஷ்ணன் | குஞ்சிதம் |
காளி என். ரத்னம் | கொடுச்சி |
வி. எம். ஏழுமலை | ஊம்பன் |
எம். ஈ. மாதவன் | மாதவ் |
கே. எல். வி. வசந்தா | ராணி |
டி. ஏ. மதுரம் | பனாமா |
சி. டி. ராஜகாந்தம் | மிஸ். மங்களம் |
மாத்தா, மேரி | பர்மிய பெண்கள் |
நடனப் பெண்கள்: கே. எஸ். சரோஜினி, வரலட்சுமி, மீனாபாய், ராஜம், சரோஜா, ராஜேசுவரி.[1]
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்
தொகுஇப்படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாடல்களை வசந்தா, ராஜகாந்தம், சாமா, என். எஸ். கிருஷ்ணன், மதுரம் ஆகியோர் பாடியிருந்தனர்.[1]
எண். | பாடல் | பாடியவர்(கள்) | குறிப்பு |
---|---|---|---|
1 | காருண்யனே கதி நீ | குழுவினர் | - |
2 | பாடிடும் கோகிலம் போலே | கே. எல். வி. வசந்தா | இந்துஸ்தான் மெட்டு[2] |
3 | எப்போதும் போல் இன்றும் | சி. டி. ராஜகாந்தம், குழந்தைகள் | பள்ளிக்கூடப் பாடல்[3] |
4 | ஈகை மிகும் இந்தியர் நாமே | கே. எல். வி. வசந்தா | 'ஜீவனகி நாவண்டோலே' மெட்டு[4] |
5 | ல ல ல...பும் சிக் பும் சிக் | சி. டி. ராஜகாந்தம், காளி என். ரத்னம் | - |
6 | புவி வாழ்வை நம்பி நாளும் | செருகளத்தூர் சாமா | - |
7 | குளிர்ந்த சீர் தரு கலா வெண்ணிலா | கே. எல். வி. வசந்தா | [5] |
8 | பார்த்தா தெரியிலையா | டி. ஏ. மதுரம் | [6] |
9 | சேர்ந்தா இப்படி சேரணும் ஜோடி | என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் | [7] |
10 | மெய்யாம் இன்பம் மெய்யாம் இன்பம் | கே. எல். வி. வசந்தா | [8] |
சப்பானிய எதிர்ப்பு
தொகுஇந்தப் படத்தில் சப்பானிய எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அதே சமயம் இந்தியாவைப் புகழ்ந்து படத்தின் கதாநாயகி கே. எல். வி. வசந்தா, பாடிய பாடல்:[1][4]
“ |
|
” |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 பர்மா ராணி பாட்டுப் புத்தகம். 1945.
- ↑ யூடியூபில் பாடிடும் கோகிலம் போலே பாடல்
- ↑ யூடியூபில் எப்போதும் போல் இன்றும் பாடல்
- ↑ 4.0 4.1 யூடியூபில் ஈகைமிகும் இந்தியர் பாடல் நிகழ்படம்
- ↑ யூடியூபில் குளிர்ந்த சீர் தரு பாடல் நிகழ்படம்
- ↑ யூடியூபில் பார்த்தா தெரியிலையா பாடல்
- ↑ யூடியூபில் சேர்ந்தா இப்படி பாடல்
- ↑ யூடியூபில் மெய்யாம் இன்பம் பாடல்
வெளி இணைப்புகள்
தொகு- பர்மா ராணி பரணிடப்பட்டது 2010-09-01 at the வந்தவழி இயந்திரம்