பிலிம் நியூஸ் ஆனந்தன்

பிலிம் நியூஸ் ஆனந்தன் (Film News Anandan) எனப்படும் பி. ஜி. அனந்த கிருஷ்ணன்[5] (பிறப்பு; சென்னை 1928[6] - 21 மார்ச் 2016) என்பவர் தமிழ்த் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என அழைக்கப்பட்டவர். இவர் சென்னையில் பிறந்தவர்.

பிலிம் நியூஸ் ஆனந்தன்
பிறப்புமணி
1 சனவரி 1926 அல்லது 1928[a]
இறப்பு21 மார்ச் 2016[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட வரலாற்றறிஞர், புகைப்பட கலைஞர், மக்கள் தொடர்பு அலுவலர்
பிள்ளைகள்(டைமண்ட் பாபு) உடன் 3 பேர்

பணிகள்

தொகு

திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த ஆனந்தன் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “பிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இதனால் இவர் பிலும் நியூஸ் ஆனந்தன் என்று அழைக்கப்பட்டார்.[7] இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது.[8][9]

விருதுகள்

தொகு

திரைப்பட வரலாற்றாசிரியராக மனித முன்னேற்றத்திற்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒய். வெங்கண்ணா கிளவுடரியின் "கலா பீடம்" விருதை ஆனந்தன் பெற்றார். 1991-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருதினை வழங்கி கௌரவித்தது. 1989-இல், ஃபிலிம் சேம்பர் பொன்விழாவின் போது ஆனந்தன் ஒரு மூத்த கலைஞராகக் கௌரவிக்கப்பட்டார்.[7] சென்னையில் உள்ள தென்னிந்திய கலைஞர்கள் சங்கம், இவருக்கு "கலைச் செல்வம்" எனும் பட்டத்தினை வழங்கியது.[7] மே 2008-இல், விஜய் தொலைக்காட்சி 2ஆவது விருதுகள் விழாவில், தமிழ் சினிமாவுக்குப் பங்களித்ததற்காக இவருக்கு விஜய் விருது வழங்கப்பட்டது.[10]

இறப்பு

தொகு

பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னை, கோடம்பாக்கத்தில் 2016 மார்ச் 21 அன்று காலமானார்.[11]

குறிப்புகள்

தொகு
  1. Both Udhav Naig of தி இந்து and the Press Trust of India state Anandan's year of birth to be 1926,[1][2] while Sudhish Kamath of The Hindu, and Jyothsna of Behindwoods state the year of birth to be 1928.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "'Film News' Anandan, cinema historian, passes away". பிசினஸ் லைன். Press Trust of India. 21 March 2016 இம் மூலத்தில் இருந்து 26 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160326125201/http://www.thehindubusinessline.com/news/variety/south-indian-cinema-historian-anandan-passes-away/article8381427.ece. 
  2. Naig, Udhav (21 March 2016). "South Indian cinema historian Anandan passes away". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160322010720/http://www.thehindu.com/news/national/tamil-nadu/film-news-anandan-cinema-historian-passes-away/article8381522.ece. 
  3. Sudhish Kamath. "Behind the scenes of Tamil cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210630070711/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/Behind-the-scenes-of-Tamil-cinema/article15914832.ece. 
  4. Jyothsna (21 March 2016). "Film News Anandan Is No More". Behindwoods. Archived from the original on 24 March 2016. Retrieved 22 March 2016.
  5. "எம். ஜி. ஆர். மன்னிப்பு கேட்டார்". தி இந்து. 25 மார்ச் 2016. Retrieved 27 மார்ச் 2016.
  6. "Behind the scenes of Tamil cinema". தி இந்து.
  7. 7.0 7.1 7.2 "Sunday Celebrity: 'Film News' Anandan, the mobile encyclopedia on films". Asian Tribune இம் மூலத்தில் இருந்து 2 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402170012/http://www.asiantribune.com/node/18275. 
  8. "தமிழக அரசாணை" (PDF). Retrieved அக்டோபர் 17, 2016.
  9. "Book on history of Tamil films released". தி இந்து. 24 அக்டோபர் 2004. Archived from the original on 28 அக்டோபர் 2016. Retrieved 28 அக்டோபர் 2016.
  10. "Star Vijay awards | Vijay TV awards| Vijay awards gallery | Kollywood films". Star Box Office. Archived from the original on 26 July 2008. Retrieved 22 May 2013.
  11. "பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் கோடம்பாக்கத்தில் இன்று காலமனார்". விகடன். 21 மார்ச் 2016. Retrieved 21 மார்ச் 2016.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிம்_நியூஸ்_ஆனந்தன்&oldid=4269934" இலிருந்து மீள்விக்கப்பட்டது