வனசுந்தரி
வனசுந்தரி (Vanasundari) என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். 1951ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.[1] டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் பு. உ. சின்னப்பா, டி.ஆர். ராசகுமாரி, டி.எசு. பாலையா மற்றும் எசு. வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.[2]
வனசுந்தரி | |
---|---|
![]() | |
இயக்கம் | டி. ஆர். ரகுநாத் |
தயாரிப்பு | லேனா செட்டியார் கிருஷ்ணா பிக்சர்ஸ் |
கதை | இளங்கோவன் |
இசை | சி. ஆர். சுப்புராமன் எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா டி. எஸ். பாலையா என். எஸ். கிருஷ்ணன் எம். ஜி. சக்கரபாணி டி. ஆர். ராஜகுமாரி டி. ஏ. மதுரம் எஸ். வரலட்சுமி டி. வி. குமுதினி |
வெளியீடு | 1951 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுஇளவரசர் குணசாகரன், நீலாபுரியின் மன்னரான தனது தந்தை மார்த்தாண்டனை வெறுக்கிறார். ஏனெனில் அவர் மக்களைப் பற்றி கவலைப்படாமல், பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுகிறார். மார்த்தாண்டன் குணசாகரனை நாட்டை விட்டு விரட்டுகிறார். குணசாகரனும் அவரது நண்பர் ஆதி மேதாவியும் வேறு நாட்டிற்குச் செல்கிறார்கள். அங்கு, மன்னரின் கொடூரமான தம்பி கபாலீகரன், தனது மூத்த சகோதரனைக் கொன்று விட்டு ஆட்சி செய்துவருகிறார். அவரது காதலர் லீலா கிட்டத்தட்ட நாட்டை ஆட்சி செய்கிறார். மன்னரின் மகள் வனசுந்தரி சிறைக் காவலில் உள்ளார். ஆதி மேதாவி திருட்டு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுகிறார். குணசாகரன் காட்டில் வனசுந்தரியைச் சந்திக்கிறார். இருவரும் தங்கள் துயரக் கதையைப் பரிமாறிக் கொள்கிறார்கள். குணசாகரன் அவளை மீட்பதாக உறுதியளிக்கிறார். பல திருப்பங்களுக்குப் பிறகு கதை மகிழ்ச்சியான முடிவைக் கொண்டுள்ளது.[3]
நடிப்பு
தொகு
|
|
தயாரிப்பு
தொகுஇந்தப் படத்தை 1950ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகக் கருதப்பட்ட எசு.எம். லெட்சுமணன் செட்டியார் தயாரித்தார்.[2] தமிழில் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்த முதல் நபரும், சென்னையில் பிரபலமான சில கார்களைப்ப் பயன்படுத்திய முதல் நபரும் இவரேயாவார். சட்ட சிக்கல்கள் காரணமாக, இவரது பெயர் அவரது எந்தப் படத்திலும் இடம்பெறவில்லை, மேலும் அவரது தயாரிப்பு நிறுவனமான "கிருட்டிணா பிக்சர்சு" மட்டுமே படப் பட்டியலில் இடம்பெற்றது.[2]
இசை
தொகுஎசு. வி. வெங்கட்ராமன் மற்றும் சி. ஆர். சுப்புராமன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.[3][4] டி.கே.பட்டம்மாள் நாடு செழித்திடா பாடலை திரைக்குப் பின்னால் பாடினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "1951 – வனசுந்தரி – கிருஷ்ணா பிக்சர்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 31 May 2018. Retrieved 1 September 2024.
- ↑ 2.0 2.1 2.2 Randor Guy (9 July 2011). "Blast from the past — Vanasundari 1951". The Hindu இம் மூலத்தில் இருந்து 20 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170420100813/http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-vanasundari-1951/article2214201.ece.
- ↑ 3.0 3.1 வணசுந்தரி (PDF) (song book). Krishna Pictures. 1951. Retrieved 1 September 2024 – via Internet Archive.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 26.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)