டாக்டர் சாவித்திரி

டாக்டர் சாவித்திரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா எழுதிய கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த படமாகும். சத்தியவான் சாவித்திரி கதையின் நவீன வடிவமான, இத்திரைப்படத்தில் அஞ்சலிதேவி, எஸ். பாலச்சந்தர், எம். என். நம்பியார், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கபடவிருக்கும் கணவனை (பந்துலு) காக்கப் போராடும் சாவித்திரியைச் (அஞ்சலி தேவி) சுற்றி இப்படத்தின் கதை வருகிறது. இப்படம் 25 நவம்பர் 1955 இல் வெளியாகி வெற்றி பெற்றது.

டாக்டர். சாவித்திரி
இயக்கம்ஆர். எம். கிருஷ்ணசாமி
தயாரிப்புஎம். ராதாகிருஷ்ணன்
அருணா பிலிம்ஸ்
கதைகதை ஆச்சார்யா
இளங்கோவன் (உரையாடல்)
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎம். என். நம்பியார்
எஸ். பாலச்சந்தர்
ஷர்மா
என். எஸ். கிருஷ்ணன்
பி. ஆர். பந்துலு
அஞ்சலி தேவி
எம். என். ராஜம்
டி. ஏ. மதுரம்
செல்லம்
வெளியீடுநவம்பர் 25, 1955
நீளம்18842 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பவர் மருத்துவர் சாவித்திரி. அவரது கணவர் சோமசுந்தரம் (பி. ஆர். பந்துலு) வங்கியில் பணிபுரிகிறார். குற்றவியல் வழக்கறிஞரான சோமசுந்தரம் (பி. ஆர். பந்துலு) தன் நண்பர் மகள் வனஜாவை (எம். என். ராஜம்) தன் மனைவியாக்கி சொத்துக்களை அடைய நினைக்கிறார். இதனால் வனஜாவுக்கு சாவித்திரியும் அவரின் கணவர் சோமசுந்தரமும் உதவ முயற்சிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நாகலிங்கம் கொல்லப்படுகிறார். கொலைப்பழி சோமசுந்தரம் மீது விழுகிறது. சாவித்திரி கொலையை விசாரித்து, உண்மையான கொலையாளியை அடையாளம் காட்டி தன் கணவரை எப்படி மீட்கிறார் என்பதே கதை.

நடிப்பு

தொகு

நடிகைகள்t[1]

நடிகர்கள்[1]

நடனம்[1]

தயாரிப்பு

தொகு

1941 ஆம் ஆண்டில், சத்தியவான் சாவித்திரி கதையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மொழித் திரைப்படமான சாவித்திரி என்ற படம் வெளியானது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, தூ. கோ. ராகவாச்சாரி (ஆச்சார்யா) அந்தப் படத்தின் கதையை தழுவி புதிய படத்தை உருவாக்க முயன்றார். ஆனால் நவீன அமைப்பைக் கொண்டதாக உருவாக்க முனைந்தார்.[2] டாக்டர் சாவித்திரி என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஆச்சார்யா எழுதினார், இதை ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்க, அருணா பிலிம்ஸ் பதாகையின் கீழ் எம். ராதாகிருஷ்ணன் தயாரித்தார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவாளராகவும், ராகவன் கலை இயக்குநராகவும், ஆர். எம். வேணுகோபால் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றினார். ஏ. கே. வேலன் மற்றும் இளங்கோவனுடன் இணைந்து ஆச்சார்யா உரையாடல் எழுதினார். ராய் சௌத்ரி, முத்துசுவாமி பிள்ளை (சாயி சுப்புலட்சுமி) மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடனத்தை வடிவமைத்தனர்.[2] படம் ஏ.வி.எம் படப்பிடிப்புத் தளத்தில் படமாக்கபட்டது.[3]

பாடல்

தொகு

உடுமலை நாராயணகவி, அ. மருதகாசி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோரின் பாடல் வரிகளுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்தார்.[1]

பாடல் பாடகர் வரிகள் நீளம்
"தேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்" பி. லீலா அ. மருதகாசி 03:09
"நாயகர் பட்சமதி" பி. ஏ. பெரியநாயகி, ஏ. பி. கோமளா மாயூரம் வேதநாயகம் பிள்ளை 02:54
"காசிக்கு போனா கரு உண்டாகும்" என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் உடுமலை நாராயணகவி 02:33
"வாதம் வம்பு பண்ணக் கூடாது" என். எஸ். கிருஷ்ணன் 02:25
"மூலைவீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கின்ற முனியப்பா" பி. லீலா 02:57
"ஜெகமெங்கும் புகழோங்கும் வீர தீர சிங்கம்" என். எஸ். கிருஷ்ணன், திருச்சி லோகநாதன் 06:03
"மாயி மகாமாயி.... ஆதி பரமேஸ்வரியே" டி. எம். சௌந்தரராஜன், ஏ. ஜி. ரத்னமாலா 06:24
"தென்பழனி மலை மேல்" டி. எம். சௌந்தரராஜன் 03:24
"நிலவோடு நீலாவனம் உறவாட" திருச்சி லோகநாதன், ஜிக்கி அ. மருதகாசி

வெளியீடும் வரவேற்பும்

தொகு

டாக்டர் சாவித்திரி 25 நவம்பர் 1955 அன்று வெளியாகி,[4] தீபாவளிக்கு தாமதமாகிவிட்டது.[5] அதே நாளில் இந்தியன் எக்சுபிரசு இதழ் "கடைசி வரை மர்மம் மற்றும் சஸ்பென்ஸின் சூழல் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது, இருப்பினும் படத்தின் இறுதிப் பகுதி சற்று நிதானமாக இருக்கிறது" என்று விமர்ச்சனம் செய்தது.[6] திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது; இது அருணா பிலிம்ஸ் நிறுவனத்தை 1950களின் தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உயர காரணமாயிற்று.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 1.2 1.3 டாக்டர் சாவித்ரி (PDF) (song book) (in Tamil). Aruna Films. 1955. பார்க்கப்பட்ட நாள் 1 August 2022.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. இங்கு மேலே தாவவும்: 2.0 2.1 2.2 Randor Guy (4 August 2012). "Blast From The Past — Doctor Savithri: 1955". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130926155530/http://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/doctor-savithri-1955/article3726984.ece. 
  3. "1955 – டாக்டர் சாவித்திரி – அருணா பிலிம்ஸ்" [1955 – Doctor Savithri – Aruna Films]. Lakshman Sruthi. Archived from the original on 27 December 2016. பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
  4. "Dr. Savitri". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 25 November 1955. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19551125&printsec=frontpage&hl=en. 
  5. "Dr. Savitri". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 18 September 1955. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19550918&printsec=frontpage&hl=en. 
  6. "Dr. Savitri". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 25 November 1955. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19551125&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்டர்_சாவித்திரி&oldid=3920439" இலிருந்து மீள்விக்கப்பட்டது