சாவித்திரி (1941 திரைப்படம்)

ஒய். வி. ராவ் இயக்கத்தில் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சாவித்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யரகுடிப்பட்டி வரதராவ் (ஒய். வி. ராவ்) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வை. வி. ராவ், சாந்தா ஆப்தே, எம். எஸ். சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சாவித்திரி
250px
இயக்கம்ஒய். வி. ராவ்
தயாரிப்புராயல் டாக்கீஸ், மதுரை
இசைகமல்தாஸ் குப்தா
துறையூர் ராஜகோபால் ஷர்மா
நடிப்புஒய். வி. ராவ்
வி. ஏ. செல்லப்பா
கே. சாரங்கபாணி
டி. எஸ். துரைராஜ்
கே. துரைசுவாமி
சாந்தா ஆப்தே
எம். எஸ். சுப்புலட்சுமி
டி. எஸ். கிருஷ்ணவேணி
கோல்டன் சாரதாம்பாள்
விநியோகம்ராயல் டாக்கீஸ்
வெளியீடுசெப்டம்பர் 5, 1941
நீளம்16 ரீல்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாபநாசம் சிவன் எழுதியிருந்த பாடல்களுக்கு இசையமைத்தவர் துறையூர் ராஜகோபால் சர்மா.

சுவையான தகவல்கள்

தொகு
 
சாவித்திரி திரைப்படத்தில் ஒரு காட்சி
  • இத்திரைப்படத்தின் இயக்குநர் வை. வி. ராவ் நான்கு இந்திய மொழிகளில் (இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம்) திரைப்படங்கள் தயாரித்த முதலாவது இயக்குநர்.[1]
  • எம். எஸ். சுப்புலட்சுமி இத்திரைப்படத்தில் நாரதராக நடித்திருந்தார்.[1]
  • சாவித்திரி பாத்திரத்தில் நடித்தவர் மராத்தி, இந்திப் படங்களில் புகழ் பெற்ற நடிகை சாந்தா ஆப்தே. இப்படத்தில் பாடி நடிப்பதற்காக இவர் ஓராண்டு காலம் தமிழ் படித்தாராம். யமன் பாத்திரத்தில் செல்லப்பாவும், சத்தியவான் பாத்திரத்தில் இயக்குநர் ராவும், இயமனாக வி. ஏ. செல்லப்பாவும் நடித்தனர்.[1]
  • கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில், சாவித்திரியின் தோழிகளில் ஒருத்தியாக நடித்தவர் வி. என். ஜானகி.[1]
  • படம் வசூலில் தோல்வியடைந்தது.[1]

பாடல்கள்

தொகு
  • சுப்புலட்சுமி, சாந்தா ஆப்தே இருவரும் பல பாடல்களை இப்படத்தில் பாடியிருந்தனர். இவற்றில் சுப்புலட்சுமியின் "சொல்லு குழந்தாய்", "தேவியைப் பூஜை", "அக்னியென்று", "மங்கலமும் பெறுவாய்", "மனமே கணமும் மறவாதே" போன்ற பாடல்கள் பிரபலமாயின.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ராண்டார் கை (5 மார்ச் 2010). "Savithiri (1941)". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)