நவம்பர் 25
நாள்
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 25 (November 25) கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர்.
- 1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான்.
- 1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான்.
- 1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன.
- 1510 – போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், உள்ளூர் கூலிப்படையினரின் உதவியிலும், கோவாவை பிஜப்பூர் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றியது. 451 ஆண்டு கால போர்த்துக்கீசக் குடியேற்ற ஆட்சி ஆரம்பமானது.
- 1667 – காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1759 – பெய்ரூத், திமிஷ்கு நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30,000-40,000 பேர் உயிரிழந்தனர்.
- 1783 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 1783 பாரிசு உடன்படிக்கை: கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
- 1795 – சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிசுலாசு ஆகத்து பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு உருசியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1833 – சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
- 1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1905 – டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் "ஏழாம் ஆக்கோன்" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனாக முடிசூடினான்.
- 1917 – முதலாம் உலகப் போர்: செருமனியப் படை மொசாம்பிக், தன்சானியா எல்லையில் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தது.
- 1926 – ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் உயிரிழந்து பலர் காயமுற்றனர்.
- 1936 – சப்பானும், செருமனியும் சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 'பர்காம் என்ற கப்பல் செருமனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
- 1947 – நியூசிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது.
- 1950 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் 22 மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியினால் 353 பேர் உயிரிழந்தனர்.
- 1960 – டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொசு இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.
- 1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1977 – பிலிப்பீன்சின் முன்னாள் மேலவை உறுப்பினர் பெனீனோ அக்கீனோவிற்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் பின்னர் 1983 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1981 – ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
- 1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.
- 1992 – செக்கோசிலோவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக 1993 சனவரி 1 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.
- 1996 – அமெரிக்காவின் நடுப்பகுதியை பனிக்கட்டைச் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
- 2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
- 2006 – சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
- 2008 – இலங்கையின் வடக்குப் பகுதியை நிசா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர், 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
பிறப்புகள்
- 1835 – ஆண்ட்ரூ கார்னேகி, இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1919)
- 1844 – கார்ல் பென்ஸ், செருமானியத் தொழிலதிபர் (இ. 1929)
- 1880 – லெனார்ட் வூல்ஃப், ஆங்கிலேய அரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1969)
- 1881 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) (இ. 1963)
- 1915 – அகஸ்தோ பினோசெட், சிலியின் 30வது அரசுத்தலைவர் (இ. 2006)
- 1926 – ரங்கநாத் மிஸ்ரா, இந்தியாவின் 21வது தலைமை நீதிபதி (இ. 2012)
- 1956 – திருவாரூர் பக்தவத்சலம், தென்னிந்திய மிருதங்க இசைக் கலைஞர்
- 1965 – டக்ரே ஸ்காட், இசுக்கொட்டிய நடிகர்
- 1978 – ராக்கி சாவந்த், இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1943 – இராசா சாண்டோ, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1894)
- 1950 – யொகான்னசு வி. யென்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர் (பி. 1873)
- 1960 – மிராபல் சகோதரிகள், டொமினிக்கன் குடியரசுப் போராளிகள்
- 1964 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு, தெலுங்கு கருநாடக, வயலின் இசைக் கலைஞர் (பி. 1893)
- 1973 – வி. ஏ. அழகக்கோன், இலங்கை அரசியல்வாதி (பி. 1903)
- 1974 – ஊ தாண்ட், பர்மிய வழக்கறிஞர், ஐநாவின் 3வது பொதுச் செயலர் (பி. 1909)
- 1984 – ஒய். பி. சவாண், இந்தியாவின் 5வது துணைப் பிரதமர் (பி. 1913)
- 1997 – ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா, மாலாவியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1898)
- 2014 – சிதாராதேவி, இந்திய நடிகை, நடனக் கலைஞர் (பி. 1920)
- 2016 – நேஷனல் செல்லையா, தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (பி. 1936)
- 2016 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 15வது அரசுத்தலைவர், புரட்சியாளர் (பி. 1926)
சிறப்பு நாள்
- விடுதலை நாள், (சுரிநாம், நெதர்லாந்திடம் இருந்து 1975)
- பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 25 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்