நேஷனல் செல்லையா

நேஷனல் செல்லையா (சூலை 31, 1936 - நவம்பர் 25, 2016) ஒரு பிரபல ஒளிப்படக் கலைஞர் ஆவார். தென்னிந்திய திரைப்பட புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிறந்தவர். அவருக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் மாயழகன் எனும் மாயா பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார், இளைய மகன் அன்பழகன் தந்தையாரைப் பின் தொடர்ந்து புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார்.

ஒளிப்படப் பணிகள்தொகு

துவக்கத்தில் அவர் பி.கே.நாகராஜன் எனும் ஒளிப்படக் கலைஞரிடம் உதவியாளராக இணைந்து “சோரி சோரி” எனும் இந்திப் படத்தில் நடிகர் ராஜ்கபூரை முதன் முதலில் படம் எடுக்கத் தொடங்கி ரஜினிகாந்த்தின் பாட்ஷா வரை 400 படங்களுக்கு மேல் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அனைத்து தலைவர்களையும் புகைப்படம் எடுத்தவர் மற்றும் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் போன்ற நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் நீ நடந்தால் நடையழகு எனும் பாடலில் போக்குவரத்து காவலர் வேடத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.[1]

கலைமாமணி விருதுதொகு

இவரின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக தமிழக அரசின் கலைமாமணி விருது 2007 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேஷனல்_செல்லையா&oldid=2946767" இருந்து மீள்விக்கப்பட்டது