சிவகங்கை மாவட்டம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.
சிவகங்கை
மாவட்டம்

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்

சிவகங்கை மாவட்டம்: அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் சிவகங்கை
பகுதி தென் மாவட்டம்
ஆட்சியர்
திரு. ப. மதுசூதன் ரெட்டி
இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

நகராட்சிகள் 4
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 9
பேரூராட்சிகள் 11
ஊராட்சி ஒன்றியங்கள் 12
ஊராட்சிகள் 445
வருவாய் கிராமங்கள் 521
சட்டமன்றத் தொகுதிகள் 4
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 4,189 ச.கி.மீ.
மக்கள் தொகை
13,39,101 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
630 551
தொலைபேசிக்
குறியீடு

04565
வாகனப் பதிவு
TN 63
பாலின விகிதம்
ஆண்-49%/பெண்-51% /
கல்வியறிவு
79.85%
இணையதளம் sivaganga

சிவகங்கை மாவட்டம் (Sivaganga district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிவகங்கை ஆகும். இந்த மாவட்டம் 4,189 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிவகங்கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

வரலாறு தொகு

சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டமானது மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது 1997இல் சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் மாற்றம் பெற்றது.பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என முதல்வராக இருந்த போது எம்ஜிஆர் அவர்களும்,

அவருக்கு பின்பு தேவர் திருமகனார் மாவட்டம் என கருணாநிதி அவர்களும்,

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மாவட்டம் என ஜெயலலிதா அவர்களும் என

இவ்வாறு ஒரு மாவட்டத்திற்கு மூன்று முதல்வர்களும் பசும்பொன் தேவரின் பெயரையே திரும்ப திரும்ப மாற்றி வைத்தனர். பின்னர் கடைசியாக #சிவகங்கை மாவட்டம் ஆனது.

 
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமலை பாறை ஓவியங்கள், சமணப் படுக்கைகள், தமிழிக் கல்வெட்டுகள் கொண்ட தொல்லியல் தளமாகும்

நிர்வாகம் தொகு

மாவட்ட வருவாய் நிர்வாகம் தொகு

வருவாய் வட்டங்கள் தொகு

 
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சிவகங்கை மாவட்டம், இரண்டு வருவாய் கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 39 உள்வட்டங்களையும், 521 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது.[1]

வருவாய் கோட்டம் வருவாய் வட்டம் வருவாய் கிராமம்
சிவகங்கை கோட்டம் 5 - சிவகங்கை, காளையார்கோவில்,மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் 267
தேவகோட்டை கோட்டம் 4 - தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி 255
மொத்தம் 9 521

ஊரக வளர்ச்சி நிர்வாகம் தொகு

இம்மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களையும்[2], 445 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[3] மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கிராமபுற பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும் மேற்பார்வையிடவும் மாவட்ட அளவில் முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இம்முகமையானது ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டது. அடுத்து நடுவன், மாநில அரசுகளின் திட்டங்கள் இம்முகமை மூலம் செயல்படுத்த வரையறுக்கப்பட்டது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன பெரிய புவியியல் பகுதிகள் நிர்வாக தேவைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதில், கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் சமூகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது கிராமபுற பகுதிகளில் வேலைவாய்புகளை உருவாக்க மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மாநில அளவில் முதன்மைச் செயலர் ஊரக வளர்ச்சி ஆணையர் ஆகிய அலுவலர்கள் இத்திட்டங்கள் செயல்படுத்துவதில் முழுப் பொறுப்பாவார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வங்கியாளர்கள், அரசுசாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆலோசனைகள் வழங்கும் குழுவாக செயல்படுவார்கள். கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துகின்றன. இத்திட்டங்களின் பயன்களைப் பொருத்து திட்டங்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன. ஊரகப் பகுதிகளில் தேவைகள் கண்டறிந்து திட்டங்கள்[4] வகுத்து செயல்படுத்தவும், தொழில்நுட்பம் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான செயல்பாடுகளை செயல்படுத்துவதாகும். அத்திட்டங்களில் அதிக அளவு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் வருமாறு;-

  1. முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
  2. தாய் திட்டம்
  3. அம்மா பூங்கா
  4. அம்மா உடற்பயிற்சிக் கூடம்

உள்ளாட்சி நிர்வாகம் தொகு

இம்மாவட்டம் சிவகங்கை, மானாமதுரை,காரைக்குடி, தேவக்கோட்டை என 4 நகராட்சிகளையும், 11 பேரூராட்சிகளையும் கொண்டது.[5]

மக்கள்தொகை பரம்பல் தொகு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19015,07,437—    
19115,41,914+0.66%
19215,58,870+0.31%
19315,94,132+0.61%
19416,45,707+0.84%
19516,70,675+0.38%
19617,47,159+1.09%
19718,86,135+1.72%
19819,96,235+1.18%
199111,03,077+1.02%
200111,55,356+0.46%
201113,39,101+1.49%
சான்று:[6]

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,339,101 ஆகும். அதில் ஆண்கள் 668,672 ஆகவும்; பெண்கள் 670,429 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.90% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்ந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 316 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 79.85 ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,37,235 ஆகவுள்ளனர்.[7]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 88.57% ஆகவும், கிறித்தவர்கள் 5.64% ஆகவும், இசுலாமியர்கள் 5.55 % ஆகவும், மற்றவர்கள் 0.24% ஆகவும் உள்ளனர்.

அரசியல் தொகு

இம்மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என 4 சட்டமன்றத் தொகுதிகளையும்; ஒரு சிவகங்கை மக்களவைத் தொகுதியும் உள்ளது.[8]

மக்களவைத் தொகுதி தொகு

 
சிவகங்கை மக்களவைத் தொகுதி
தொகுதி தற்போதைய உறுப்பினர் கட்சி
சிவகங்கை கார்த்தி சிதம்பரம் இ.தே.கா

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

தொகுதி எண் தொகுதி தற்போதைய உறுப்பினர் கட்சி
184 காரைக்குடி மாங்குடி இ.தே.கா
185 திருப்பத்தூர் பெரிய கருப்பன் திமுக
186 சிவகங்கை P. R. செந்தில்நாதன் அதிமுக
187 மானாமதுரை தமிழரசி அதிமுக

எல்லைகள் தொகு

இம்மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென் கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென் மேற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

வேளாண்மை தொகு

தமிழக அரசின் வேளாண் துறை தரவுகளில் இருந்து கீழ்கண்ட தரவுகள் உருவாக்கப்படுகின்றன.[9][10] அவை வருடா வருடம் மாறும் என்பதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவும்.

நிலத்தின் அளவைகள் தொகு

சிவகங்கை மாவட்டத்தில் நில அளவை பணிகளை பொறுத்தமட்டில் புலப்படங்கள் கணிணிமயமாக்குதல்,[11] நத்தம் மற்றும் நகர ஆவணங்கள் கணிணிமயமாக்கல், கணிணிமயமாக்கப்பட்ட நில அளவை ஆவணங்களை பராமரித்தல் மற்றும் இணையவழி பட்டா மாறுதல் குறித்த பணிகள் நடைபெற்று கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் இணைய வழி பட்டா மாறுதல் தமிழ்நிலம் மென்பொருள் மூலமாக 1.11.2015 முதல் இன்றளவில் பட்டா மாறுதல் முழுப்புலம் மற்றும் உட்பிரிவு புலங்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெறாமல் கூட்டுறவு சங்கங்கள் வட்ட அலுவலகங்களில் உள்ள இ-சேவை இதுபோன்ற பொது சேவை மையங்கள் மூலமாக மனுக்களை பெற்று இணைய வழியில் பட்டா வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தின் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஆகிய 9 வட்டங்களும் 39 குறுவட்டங்களும் 521 வருவாய் கிராமங்களும் உள்ளது. மொத்தமுள்ள 9 வட்டங்களில் உள்ள 521 கிராமங்களில் புலப்படங்களை கணிணியில் வரைவு செய்யும் பணியில் மொத்தம் 521 கிராமங்களில் உள்ள மொத்த புலங்கள் 1,53,801ல் 1,47,556 புலப்படங்கள் கணினியில் வரைவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 6245 புலப்படங்கள் வரைவு செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளன. மேலும், கணினிமயமாக்கப்பட்டுள்ள 1,47,556 புலங்களில் வட்ட அலுவலகங்களில் இணைய வழிப்படுத்துவதற்காக 1,42.025 புலங்கள் அங்கீகாரம் செய்யப்பட்டு மீதமுள்ள புலப்படங்கள் வட்ட அலுவலகங்களில் புலப்படங்கள் அங்கீகாரம் செய்யும் பணிகள் முடிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலப்படங்கள் கணிணிப்படுத்தல் பணிகள் முடிவுற்ற பிறகு பொதுமக்கள் இணையதளம் வாயிலாக பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் வேளாண் குடிமக்கள் எளிய முறையில் தங்கள் நில உடைமை ஆவணத்தினைப் பெற வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

செட்டிநாடு தொகு

 
வாழை இலையில் பரிமாறப்பட்ட செட்டிநாட்டு உணவு

செட்டிநாடு தனவணிகர்கள் என்றும் நகரத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதியாகும். இங்கு சமைக்கப்படும், செட்டிநாட்டு சமையல் வாசனைச் சரக்குகளும், நறுமணப் பண்புகளும் நிறைந்த ஒரு இந்திய சமையல் வகை ஆகும். செட்டிநாட்டு சமையலில், இறைச்சி உணவு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பல்வகை வாசனைச் சரக்குகள் பிரபலமானவை. வழமையான உணவுக்கு சுவை கூட்டுவது, அவ்வப்போது அரைத்துச் சேர்க்கும் காரமும் நெடியும் நிறைந்த மசாலாக்கள் மற்றும் மேல் அலங்காரமாக வைக்கப்படும் அவித்த முட்டை போன்றனவாகும்.

இம்மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சில தொகு

 
காளையார்கோயில் காளீஸ்வரர்கோயிலின் வெளித்தோற்றம்

கல்வி நிறுவனங்கள் தொகு

பல்கலைக் கழகங்கள் தொகு

கல்லூரிகள் தொகு

ஆய்வகம் தொகு

குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

இம்மாவட்டத்தின் குறிப்பிட்டத்தக்கவர்களாக பின்வரும் நபர்களைச் சொல்லலாம்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்பகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கை_மாவட்டம்&oldid=3700949" இருந்து மீள்விக்கப்பட்டது