காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்

சொர்ணகாளீஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ளது. சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கானப்பேர்
அமைவிடம்
ஊர்: காளையார்கோவில்
மாவட்டம்:சிவகங்கை மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சொர்ணகாளீஸ்வரர்
தாயார்:சொர்ணவல்லி
தல விருட்சம்:கொக்கு மந்தாரை
தீர்த்தம்:கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்

அமைவிடம்தொகு

சென்னை-ராமேஸ்வரம் அல்லது திருச்சி-மானாமதுரை இருப்புப்பாதையில் சிவகங்கை தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள காளையார்கோயிலில் உள்ளது. சிவகங்கை நகரத்திலிருந்து கிழக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன், இறைவிதொகு

இத்தலத்தின் மூலவர் சொர்ணகாளீஸ்வரர், தாயார் சொர்ணவல்லி. மந்தாரை மரம் இத்தலத்தின் தலவிருட்சமாகும்.

பிற சன்னதிகள்தொகு

இக்கோயில் வளாகத்தில் சோமேஸ்வரர்-சுந்தராம்பிகை சன்னதிகளும், சுந்தரேஸ்வரர்-மீனாட்சி சன்னதிகளும் உள்ளன.

திருப்பணிதொகு

அண்மையில் இக்கோயிலில் திருப்பணி நிறைவுற்றுள்ளது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

படத்தொகுப்புதொகு