சிவகங்கை மக்களவைத் தொகுதி
சிவகங்கை மக்களவைத் தொகுதி (Sivaganga Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 31வது தொகுதி ஆகும்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() சிவகங்கை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1967-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,092,438 |
சட்டமன்றத் தொகுதிகள் | 181. திருமயம் 182. ஆலங்குடி 184. காரைக்குடி 185. திருப்பத்தூர் 186. சிவகங்கை 187. மானாமதுரை (தனி) |
தொகுதி மறுசீரமைப்புதொகு
தொகுதி மறுசீரமைப்பின் கீழ் சிவகங்கை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.
திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை. மற்ற தொகுதிகள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவை.
சட்டமன்ற தொகுதிகள்தொகு
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
மக்களவை உறுப்பினர்கள்தொகு
இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:
ஆண்டு | வென்ற வேட்பாளர் | கட்சி |
---|---|---|
1967-71 | தா. கிருட்டிணன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1971-77 | தா. கிருட்டிணன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1977-80 | பெரியசாமி தியாகராஜன் | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1980-84 | ஆர். வி. சுவாமிநாதன் | இந்திய தேசிய காங்கிரசு |
1984-89 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரசு |
1989-91 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரசு |
1991-96 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரசு |
1996-98 | ப. சிதம்பரம் | தமிழ் மாநில காங்கிரசு |
1998-99 | ப. சிதம்பரம் | தமிழ் மாநில காங்கிரசு |
1999-04 | மா. சுதர்சன நாச்சியப்பன் | இந்திய தேசிய காங்கிரசு |
2004-2009 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரசு |
2009-2014 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரசு |
2014-2019 | பி. ஆர். செந்தில்நாதன் | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2019–தற்போது வரை | கார்த்தி சிதம்பரம்[1] | இந்திய தேசிய காங்கிரசு |
14வது மக்களவை தேர்தல் முடிவுதொகு
ப. சிதம்பரம் - காங்கிரசு - 4,00,393
கருப்பையா - அதிமுக - 2,37,668
வாக்குகள் வேறுபாடு - 1,62,725
15வது மக்களவைத் தேர்தல் முடிவுதொகு
20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் ப. சிதம்பரம், அதிமுகவின் இராஜ கண்ணப்பனை, 3,354 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ப. சிதம்பரம் | காங்கிரசு | 3,34,348 |
இராஜ கண்ணப்பன் | அதிமுக | 3,30,994 |
பர்வத ரஜினா பாப்பா | தேமுதிக | 60,054 |
எம்.ஜி. தேவர் | பகுஜன் சமாஜ் கட்சி | 6,600 |
தூத்தை செல்வம் | சுயேட்சை | 6,997 |
மலைராஜ். பி | சுயேட்சை | 6,481 |
16வது மக்களவைத் தேர்தல்தொகு
முக்கிய வேட்பாளர்கள்தொகு
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. ஆர். செந்தில்நாதன் | அதிமுக | 4,75,993 |
சுப. துரைராஜ் | திமுக | 2,46,608 |
எச். ராஜா | பாஜக | 1,33,763 |
கார்த்தி சிதம்பரம் | காங்கிரசு | 1,04,678 |
வாக்குப்பதிவுதொகு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
70.98% | 72.83% | ↑ 1.85% |
17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு
வாக்காளர் புள்ளி விவரம்தொகு
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
முக்கிய வேட்பாளர்கள்தொகு
இத்தேர்தலில் காங்கிரசு கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம், பாஜக வேட்பாளரான, எச். ராஜாவை விட 3,32,244 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
கார்த்தி சிதம்பரம் | காங்கிரசு | 2,102 | 5,66,104 | 52.2% | |
எச். ராஜா | பாஜக | 565 | 2,33,860 | 21.56% | |
வி. பாண்டி | அமமுக | 209 | 1,22,534 | 11.3% | |
வி. சக்தி பிரியா | நாம் தமிழர் கட்சி | 249 | 72,240 | 6.66% | |
கவிஞர் சினேகன் | மக்கள் நீதி மய்யம் | 85 | 22,931 | 2.11% | |
பி. ராஜேந்திரன் | - | சுயேட்சை | 8 | 11,167 | 1.03% |
வாக்குப்பதிவுதொகு
2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | 2019 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
↑ % |
மேற்கோள்கள்தொகு
- ↑ "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. 2 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.