அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

(அமமுக இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (Amma Makkal Munnettra Kazagam, அமமுக) என்பது தமிழ்நாட்டில் செயல்படும் ஓர் அரசியல் கட்சியாகும். இது வி. கே. சசிகலா மற்றும் டி. டி. வி. தினகரனால், 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[1] நவம்பர் 23, 2017 ஆம் ஆண்டு வி. கே. சசிகலா மற்றும் தினகரனிடம் இருந்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பறித்துக்கொண்டது.[2] இதனால் கட்சி மற்றும் சின்னம் இல்லாமல் ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறி
அமமுக
தலைவர்
நிறுவனர்வி. கே. சசிகலா மற்றும் டி. டி. வி. தினகரன்
தொடக்கம்15 மார்ச்சு 2018 (7 ஆண்டுகள் முன்னர்) (2018-03-15)
பிரிவுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைமையகம்அடையாறு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
மாணவர் அமைப்புமாணவர் அணி
இளைஞர் அமைப்புஎம் ஜி ஆர் இளைஞர்அணி இளைஞர்பாறை
பெண்கள் அமைப்புமகளிர் அணி இளம்பெண் பாசறை
விவசாயிகள் அமைப்புஅம்மாபேரவை
கொள்கைநடுநிலை
அரசியல் நிலைப்பாடுநடுநிலை
நிறங்கள்கருப்பு  ,வெள்ளை   மற்றும் சிவப்பு  
தேசியக் கூட்டுநர்டி. டி. வி. தினகரன்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,0
தேர்தல் சின்னம்
பிரஷர் குக்கர்
கட்சிக்கொடி
இந்தியா அரசியல்

அமைப்பின் பெயர்

மதுரை, மேலூரில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை மார்ச்சு 15, 2018 அன்று அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் தன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்தார்.[3]

கொடி

கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது. இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று டி. டி. தினகரன் தெரிவித்தார்.

2019 பாராளுமன்றத் தேர்தல்

2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது. இந்தக் கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.[4]

போட்டியிட்ட தேர்தல்கள்

இந்திய பொதுத் தேர்தல்கள்

மக்களவைத் தேர்தல்கள்
வருடம் தேர்தல் பொதுச்செயலாளர் வென்ற தொகுதிகள் போட்டியிட்ட தொகுதிகள் வாக்கு (%) மாற்றம் முடிவு மொத்த வாக்குகள்
2019 பொதுத் தேர்தல், 2019 டி. டி. வி. தினகரன் 0 37 5.46 மாற்றங்கள் இல்லை தோல்வி 22,25,377

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்
வருடம் தேர்தல் பொதுச்செயலாளர் வென்ற தொகுதிகள் போட்டியிட்ட தொகுதிகள் வாக்கு (%) மாற்றம் முடிவு மொத்த வாக்குகள்
2021 சட்டமன்றத் தேர்தல், 2021 டி. டி. வி. தினகரன் 0 171 2.36 மாற்றங்கள் இல்லை தோல்வி 1,088,789

மேற்கோள்கள்

  1. "புதிய அமைப்பைத் தொடங்கினார் தினகரன்".
  2. "இரட்டை இலைச் சின்னம் எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது? தேர்தல் ஆணையம் சொல்லும் விளக்கம்".
  3. "TTV Dinakaran Launches His Party 'Amma Makkal Munnetra Kazhagam'; Unveils Flag With Jayalalithaa's Photo".
  4. "டிடிவி தினகரன் அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு: 59 தொகுதிகளில் ஒரே சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம்". இந்து தமிழ் திசை. 29 மார்ச் 2019. Retrieved 9 ஏப்ரல் 2019.