இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப் பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தவும், மேற்பார்வையிடவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகும்.
தேர்தல் ஆணையர்கள் தொகு
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இருப்பர். அவருக்கு உதவிட இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பர். இந்தியத் தலைமை ஆணையர் மற்றும் பிற இரண்டு ஆணையர்களையும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் 65 வயது நிரம்பும் வரை ஆகும்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்[1] தொகு
தேர்தல் செலவுக்கான உச்சவரம்பு தொகு
மாநிலத்தின் அளவு, தொகுதியின் அளவு, வாக்காளர்களின் எண்ணிக்கை என்று எதையுமே கணக்கில் கொள்ளாமல் மக்களவை தொகுதிக்கு ரூ.70 இலட்சமும், சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ.29 இலட்சமும் ஒரு வேட்பாளர் செலவு செய்யலாம் என்று மத்திய தேர்தல் ஆணையம் வரம்பு விதித்துள்ளது.[4]
இதனையும் காண்க தொகு
வெளி இணைப்புகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள்". இந்தியத் தேர்தல் ஆணையம். 2008-11-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.indianexpress.com/news/navin-chawla-takes-over-as-cec-on-tue/449165/ |இந்தியன் எக்சுபிரசில் வந்த செய்தி
- ↑ "போலித்தனமான புரிதல்!". தினமணி. 6 பெப்ரவரி 2014. 6 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.