சுக்பீர் சிங் சந்து

சுக்பீர் சிங் சந்து (Sukhbir Singh Sandhu-பிறப்பு: சூலை 6,1963) என்பவர் உத்தராக்கண்டு 1988-ஆம் ஆண்டு தொகுதி சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் பஞ்சாப் மாநிலத்தினைச் சேர்ந்தவர் ஆவார்.[1][2] சந்து 14,2024 அன்று இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

சுக்பீர் சிங் சந்து
ਸੁਖਬੀਰ ਸਿੰਘ ਸੰਧੂ
ਸੁਖਬੀਰ ਸਿੰਘ ਸੰਧੂ
இந்திய தேர்தல் ஆணையாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 மார்ச்சு 2024
முன்னையவர்அருண் கோயல்
நிறுவனத்தின் செயலாளர் - லோக்பால் - இந்தியா
பதவியில்
1 பிப்ரவரி 2024 – 13 மார்ச்சு 2024
முன்னையவர்பாரத் லால்
தலைமைச் செயலாளர்
பதவியில்
6 சூலை 2021 – 31 சனவரி 2024
முன்னையவர்ஓம் பிரகாசு சிங்
பின்னவர்இராதா ரத்தூரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சூலை 1963 (1963-07-06) (அகவை 60)
வேலைஇந்திய ஆட்சிப் பணி

இதற்கு முன்பு, இவர் உத்தராகண்டம் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றினார். புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராகப் பதவியேற்றபோது சந்து தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2021 சூலை 6 அன்று பொறுப்பேற்று 2024 சனவரி 31 வரை பணியாற்றினார். 2024 பிப்ரவரி 1 அன்று லோக்பாலின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் இவர் 2024 மார்ச் 14 வரை பணியாற்றினார். இதன்பிறகு, இவர் இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். முன்னதாக, சந்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவராகவும் சுமார் 2 ஆண்டுகள் பணியாற்றினார். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அமிருதசரசு அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் முடித்த இவர், அமிர்தசரசில் உள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். 'நகர்ப்புற சீர்திருத்தங்கள்' மற்றும் 'நகராட்சி மேலாண்மை மற்றும் திறன் மேம்பாடு' குறித்த கட்டுரைகளை இவர் வெளியிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட்சி ஆணையர் பணியாற்றியதற்காக இவருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Who are new election commissioners Sukhbir Singh Sandhu and Gyanesh Kumar?". Hindustan Times. 14 March 2024. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
  2. "Who is Sukhbir Sandhu, newly appointed election commissioner?". The Times of India. 14 March 2024. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்பீர்_சிங்_சந்து&oldid=3911495" இலிருந்து மீள்விக்கப்பட்டது