இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்

மருத்துவப் படிப்பு

இக்கட்டுரை இந்தியாவில் வழங்கப்படும் எம்பிபிஎஸ் படிப்பைப் பற்றியது.

இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் (Bachelor of Medicine and Bachelor of Surgery) அல்லது எம்பிபிஎஸ் (MBBS) என்பது இந்தியா உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் ஒரு தொழிற் பட்டப்படிப்பு ஆகும். இது எம்பிபிஎஸ் என்ற ஆங்கிலச் சுருக்கத்தாலும் எளிமையாக மருத்துவப் பட்டப் படிப்பு என்றே பரவலாக அறியப்படுகிறது. இதன் பெயர் இப்படிப்பை இரட்டைப் பட்டப் படிப்பு (dual degree) என்பது போல் உணர்த்தினாலும் இது ஒரே படிப்பாகவே கருதப்படுகின்றது.

மொத்த இடங்கள்

தொகு

இந்தியாவில் உள்ள 335 அரசு மற்றும் தனியார் ‌மருத்துவக் கல்லூரிகளில் பொத்தம் 40385 மருத்துவப் பட்டப் படிப்பிற்கான இடங்கள் உள்ளன. [1] இவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடங்களில் சரி பாதி நடுவணரசிற்குரியது. இந்த இடங்களில் (ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆந்திரப்பிரதேசம் தவிர) இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தவரும் சேர்ந்து படிக்கலாம். இந்த இடங்கள் அனைத்திந்திய அளவில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் (National Council of Educational Research and training) நடத்தப்படும் மருத்துவம் மற்றும் பல்மருத்துவத்திற்கான (premedical predental - PMPD) நுழைவுத் தேர்வின் மூலம் நிரப்பப்படுகின்றன. மீதிப்பாதியை அந்தந்த மாநில அரசுகள் நிரப்பிக் கொள்ளலாம். ஜம்மு காசுமீர் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் அந்த மாநிலத்தவர்கள் மட்டுமே சேர முடியும். அதே போல அந்த மாநிலத்தவர்களும் வேறு மாநில மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நடுவணரசிற்கான 50 விழுக்காட்டு இடத்தில் சேர முடியாது.

சேர்க்கை நடைமுறை

தொகு

இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தியாவில் மருத்துவக் கல்வியை நிர்வகிக்கும் அமைப்பாக இருந்து வருகிறது. எனினும் இந்தியாவில் உள்ள வெவ்வேறு மாநிலங்களில் மருத்துவப் பட்டப் படிப்புச் சேர்க்கையில் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இப்படிப்பைப் பயில ஒருவர் +2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

படிப்புக் காலம்

தொகு

இப்படிப்பின் குறைந்த பட்ச காலம் நான்கரை ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓர் ஆண்டு கட்டாய சுழற்சி உறைவிடப் பயிற்சி சேர்த்து மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். மற்ற பெரும்பாலான தொழிற்படிப்புகளில் கடைப்பிடிக்கப்படுவதைப் போல் இப்படிப்பில் பருவத்தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை. முதலாம் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறாதோர் இரண்டாம் ஆண்டிற்குச் செல்ல இயலாது. மீண்டும் ஆறு மாதங்கள் முதலாம் ஆண்டிலேயே இருக்க வேண்டும். இதேபோல் நான்கரை ஆண்டுகள் இறுதியில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறாதோர் கட்டாய சுழற்சி உறைவிட சுழற்சி பயிற்சியில் ஈடுபட முடியாது.

வெளியிணைப்பு

தொகு

இந்திய மருத்துவக்கவுன்சிலின் இணையதளம் பரணிடப்பட்டது 2009-11-03 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

தொகு