புஷ்கர் சிங் தாமி

இந்திய அரசியல்வாதி

புஷ்கர் சிங் தாமி (Pushkar Singh Dhami, பிறப்பு: 16 செப்டம்பர் 1975) இந்தியாவின் உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 4 சூலை 2021 அன்று 10-வது உத்தராகண்ட் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[1] 2017-இல் புஷ்கர் சிங் தாமி உதம்சிங் மாவட்டத்தில் உள்ள கதிமா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2][3] இவர் இளம் வயதில் 45வது அகவையில் உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டவர்.

புஷ்கர் சிங் தாமி
10-வது உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல்
பதவியில்
4 சூலை 2021 – தற்போது வரை
ஆளுநர்பேபி ராணி மௌரியா (2022 மார்ச் வரை)
முன்னையவர்தீரத் சிங் ராவத்
உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012 – மார்ச் 2022
தொகுதிகதிமா சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2022
தொகுதிசம்பாவத் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஉத்தராகண்ட் முதலமைச்சர்
16 செப்டம்பர் 1975 (1975-09-16) (அகவை 49)
பிதௌரகட், உத்தராகண்ட், இந்தியா
இறப்புஉத்தராகண்ட் முதலமைச்சர்
இளைப்பாறுமிடம்உத்தராகண்ட் முதலமைச்சர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கீதா தாமி
பிள்ளைகள்2 மகன்கள்
பெற்றோர்
  • உத்தராகண்ட் முதலமைச்சர்
வாழிடம்(s)காதிமா, உதம்சிங் நகர் மாவட்டம்
கல்விமுதுநிலை சட்டப் படிப்பு
முன்னாள் கல்லூரிலக்னோ பல்கலைக்கழகம்
இணையத்தளம்www.pushkarsinghdhami.in

2022 உத்தரகண்ட் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், புஷ்கர் சிங் தாமியை இரண்டாம் முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, 23 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[4][5]

பின்னணி

தொகு

2017-இல் நடைபெற்ற உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலம் பெற்று, முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். உட்கடசி பூசல்களால் 10 மார்ச் 2021 அன்று திரிவேந்திர ராவத் முதலமைச்சர் பதவி துறந்தார். பின்னர் மக்களவை உறுப்பினராக உள்ள தீரத் சிங் ராவத் 10 மார்ச் 2021 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத தீரத் சிங் ராவத், வரும் செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய சூழல் இருந்தது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்தது. உத்தரகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியிலும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அடுத்தாண்டு, உத்தரகண்டில் சட்டமன்ற தேர்தலும் நடக்கவுள்ளது. இந்நிலையில் உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினரான புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[6][7][8]

சம்பாவத் இடைத்தேர்தலில் வெற்றி

தொகு

சம்பாவத் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி, 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சம்பாவத் இடைத்தேர்தலில் புஷ்கர் சிங் தமி 58,258 ஒட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா ககடோடி 3,233 ஓட்டுகளும் பெற்றனர்.[9]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Mishra, Himanshu (3 July 2021). "BJP MLA Pushkar Singh Dhami to take oath as 11th chief minister of Uttarakhand tomorrow" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/pushkar-dhami-next-chief-minister-uttarakhand-1823449-2021-07-03. 
  2. Ahuja, Aakash (10 January 2017). "Probe ‘misuse’ of government machinery, officers by ruling Congress: Bharatiya Janata Party to State election commission | Dehradun News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/dehradun/probe-misuse-of-govt-machinery-officers-by-ruling-cong-bjp-to-sec/articleshow/56427751.cms. 
  3. CM Harish Rawat's sons, daughter in poll fray, Congress state chief' favours' one family-one ticket formula
  4. "உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார் புஷ்கர் சிங் தாமி". Archived from the original on 2022-03-23. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
  5. Pushkar Singh Dhami sworn in as new Uttarakhand CM
  6. புஷ்கர் சிங் தாமி உத்தராகண்ட் முதலமைச்சராகிறார்
  7. உத்தரகண்ட் முதல்வராகிறார் புஷ்கர் சிங்
  8. Pushkar Singh Dhami to be the new Chief Minister of Uttarakhand
  9. உத்தரகண்ட் இடைத்தேர்தல்: 55 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முதல்வர் வெற்றி
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்கர்_சிங்_தாமி&oldid=3926341" இலிருந்து மீள்விக்கப்பட்டது