பித்தோரகர் (Pithoragarh) இந்தியாவின் மேற்கு இமயமலையில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிதௌரகட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது இமயமலையில் 1,800 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த நகரம் ரிஷிகேசிலிருந்து தென்கிழக்கே 454 கிமீ தொலைவில் குமாவுன் கோட்டத்தில் உள்ளது. தார்ச்சுலா-லிபுலேக் சாலை பித்தௌரகட் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ள்து.

பிதௌரகட்
पिथौरागढ़
நகரம்
சூரிய உதயத்தின் போது பிதௌரகட் நகரத்தின் காட்சி
சூரிய உதயத்தின் போது பிதௌரகட் நகரத்தின் காட்சி
பிதௌரகட் is located in உத்தராகண்டம்
பிதௌரகட்
பிதௌரகட்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பிதௌரகட் நகரத்தின் அமைவிடம்
பிதௌரகட் is located in இந்தியா
பிதௌரகட்
பிதௌரகட்
பிதௌரகட் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°35′N 80°13′E / 29.58°N 80.22°E / 29.58; 80.22
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
கோட்டம்குமாவுன்
ஏற்றம்1,800 m (5,900 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்56,044
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்262501
தொலைபேசி குறியீடு915964
வாகனப் பதிவுUK-05
இணையதளம்pithoragarh.nic.in

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 15 வார்டுகளும், 14,036 வீடுகளும் கொண்ட பித்தோரகர் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 56,044 ஆகும். அதில் ஆண்கள் 29,127 மற்றும் பெண்கள் 26,917 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,624 (11.82%) ofஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 924 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.48% ஆக உள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 93.31%, இசுலாமியர் 5.01% மற்றும் பிறர் 1.68% ஆகவுள்ளனர்.[2][3]

போக்குவரத்து தொகு

 
பிதௌரகட் நகரத்தின் அகலப்பரப்புக் காட்சி
 
நைனி சைனி வானூர்தி நிலையம்

தென்மேற்கு பஞ்சாப் மாநிலத்தின் மலௌத் கிராமத்தையும், பிதௌரகட் மாவட்டத்தின் அஸ்க் கிராமத்தையும இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 9 பிதௌரகட் நகரத்தின் வழியாக செல்கிறது. இச்சாலை மூலம் மொரதாபாத், புதுதில்லி, அரியானா மற்றும் பஞ்சாப் நகரங்களுடன் பிதௌரகட் நகரம் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 9 தற்போது தார்ச்சுலா-லிபுலேக் சாலையுடன் இணைக்கப்பட்டுள்ள்து.

பிதௌரகட் நகரத்திற்கு வடகிழக்கே 5 கிமீ தொலைவில் நைனி சைனி வானூர்தி நிலையம் உள்ளது.[4][5] [6][7]

இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 151 கிமீ தொலைவில் உள்ள தனக்பூர் ஆகும். கொத்தகூடம் தொடருந்து நிலையம் 212 கிமீ தொலைவில் உள்ளது. தார்ச்சுலா-லிபுலேக் சாலை பித்தௌரகட் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ள்து.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பித்தோரகர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிதௌரகட்&oldid=2998367" இருந்து மீள்விக்கப்பட்டது