பிதௌரகட் மாவட்டம்
பிதௌரகட் மாவட்டம் (Pithoragarh district) (இந்தி: पिथौरागढ़ जिला) இந்தியாவின் இமயமலையின் கிழக்கு கோடியில், உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பிதௌரகட் நகராகும். இம்மாவட்டம் 7,090 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. தொலைவு மற்றும் நேரம் குறைவு காரணமாக, இந்தியாவிலிருந்து கைலாச யாத்திரை மேற்கொள்பவர்கள் இம்மாவட்டத்தின் தார்ச்சுலா பகுதி வழியாக பயணிக்கலாம்.[1][2][3] இதனால் பயணச் செலவும், நேரமும் குறைவாகும்.
பிதௌரகட் மாவட்டம்
पिथौरागढ़ जिला | |
---|---|
மாவட்டம் | |
உத்தராகண்ட மாநிலத்தில் பிதௌரகட் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
கோட்டம் | குமாவுன் |
தலைமையிடம் | பிதௌரகட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,090 km2 (2,740 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,83,439 |
• அடர்த்தி | 68/km2 (180/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 262501 |
தொலைபேசி குறியீடு | 91 5964 |
வாகனப் பதிவு | UK-05 |
இணையதளம் | pithoragarh |
இம்மாவட்டத்தில் தார்ச்சுலா, லிபுலெக் கணவாய் மற்றும் காலாபானி சமவெளி உள்ளதுடன் சாரதா ஆறும் பாய்கிறது.
மாவட்ட எல்லைகள்
தொகுபிதௌரகட் மாவட்டம், வடக்கில் திபெத் தன்னாட்சி பகுதி (சீனா), கிழக்கில் நேபாளம், தெற்கில் சம்பாவத் மாவட்டம், தென்மேற்கில் அல்மோரா மாவட்டம், மேற்கில் பாகேஸ்வர் மாவட்டம், வடமேற்கில் சமோலி மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.
மொழிகள்
தொகுஇம்மாவட்ட மக்கள் தேவநாகரி எழுத்து வடிவம் கொண்ட குமாவனி மொழி பேசுகின்றனர். மேலும் இந்தோ-திபெத்திய மொழிகளும் பேச்சு மொழியாக உள்ளது.
தட்ப வெப்பம்
தொகுஇமயமலையில் மூவாயிரம் முதல் மூவாயிரத்தி ஐநூறு மீட்டர் உயர மலைப்பகுதிகளில் இம்மாவட்டம் அமைந்துள்ளதால் குளிர்காலத்தில், பொதுவாக டிசம்பர், சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெப்பநிலை பூச்சியம் பாகைக்குக் கீழ் காணப்படுகிறது. மார்ச் முதல் சூன் வரை மிதமான கோடைகாலம் நிலவுகிறது.
பருவ காலங்கள்
தொகு- குளிர்காலம் : டிசம்பர் முதல் மார்ச் முடிய
- கோடைகாலம் : மார்ச் முதல் சூன் முடிய
- பருவ மழைக் காலம்: வடமேற்கு பருவ மழை- சூன் முதல் செப்டம்பர் முடிய
- வடகிழக்கு பருவ மழை; செப்டம்பர் முதல் நவம்பர் முடிய
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 483,439 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 239,306 மற்றும் பெண்கள் 244,133 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1020 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 68 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 82.25 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.75 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.29 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 63,293 ஆக உள்ளது.[4]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்வரின் மக்கள்தொகை 4,75,105 ஆகவும், இசுலாமிய சமயத்வரின் மக்கள் தொகை 6,015 ஆகவும் மற்றும் பிற சமயத்தினர் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
அரசியல்
தொகுபிதௌரகட் மாவட்டம் தார்சுலா, திதிஹாட், பிதௌரகட், கங்கோரகர் (தலித்) என நான்கு சட்டமன்ற தொகுதிகள் கொண்டுள்ளது.
புவியியல்
தொகுபிதௌரகட் மாவட்டத்தின் பனியாறுகள்
தொகுஉள்ளூரில் பனியாறுகளை கல் (Gal) என்றழைக்கப்படுகிறது. அவைகள்; மிலம், நமிக், ராலம், மியோலா, சோனா, பஞ்சசுலி, சிப்பு, ரூலா, காலாபாலந்து, லவன், பம்லஸ், பால்டிம்கா, டெரகர், பாட்டிங், தால்கோட், சங்கல்பம், லஸ்சர், தௌலி, பாலிங் கோல்பு, சோப்லா தெஜம், காளி, குட்டி மற்றும் யாங்டி பாசின் ஆகிய பனியாறுகள் ஆகும்.
பிதௌரகட் மாவட்டத்தின் கொடுமுடிகள்
தொகுஇமயமலையின் பிதௌரகட் மாவட்டத்தில் நந்தா தேவி கொடுமுடி (கிழக்கு) (7,434 மீட்டர் உயரம்), ஹர்தியோல் (உயரம் 7,151 மீட்டர்), திரிசூலி (உயரம் 7,099 மீட்டர்), ரிஷி பாகர் கொடுமுடி, பஞ்ச்சூலி கொடுமுடி, நந்தகோட் கொடுமுடி, சிரிங்வி கொடுமுடி, ராஜ்ரம்பா கொடுமுடி, சௌதாரா கொடுமுடி, சங்தங் கொடுமுடி, பஞ்சசூலி V கொடுமுடி, நாகலாபு கொடுமுடி, சுட்டில்லா (சுஜ் தில்லா மேற்கு) கொடுமுடி, சுஜ் தில்லா கிழக்கு கொடுமுடி, பஞ்ச்சூலி I கொடுமுடி, பம்பா தூரா கொடுமுடி, பர்பு தூரா கொடுமுடி, பஞ்சசூலி IV கொடுமுடி, சாங்குச் கொடுமுடி, நந்த கோண்ட் கொடுமுடி, பஞ்ச்சூலி கொடுமுடி, நந்தா பால் கொடுமுடி, சூலி மேடு கொடுமுடி, குச்செல்லா கொடுமுடி, நிடால் தௌர் கொடுமுடி, கல்கங்கா துரா கொடுமுடி, ஜோன்லிங்கோங் அல்லது பாபா கைலாஷ் கொடுமுடி, லல்லா வீ கொடுமுடி, காலபாலந்து துரா கொடுமுடி, தெல்கோட் கொடுமுடி, பைந்தி கொடுமுடி, இக்குவாலரி கொடுமுடி, நக்லிங் மலை கொடுமுடி, மேனகா கொடிமுடி, திரிகால் கொடுமுடி, யுங்டாங்டோ கொடுமுடி, சங்கல்பம் கொடுமுடி, லஸ்பா துரா கொடுமுடி, சக்தேவ் கொடுமுடி, ரலாம் துரா கொடுமுடி, கில்டிங் கொடுமுடி, சிவு கொடுமுடி, திஹுதியா கொடுமுடி, திரௌபதி கொடுமுடி, ரம்பா கோட் கொடுமுடி மற்றும் பாஞ்சாலி சூலி ஆகிய கொடுமுடிகள் அமைந்துள்ளது.
இந்திய-திபெத்தை கணவாய்கள்
தொகுபிதௌரகட் மாவட்டத்திலிருந்து லிம்பியா துரா கணவாய், லிபுலெக் கணவாய், மங்சியா துரா கணவாய், மங்சியா துரா கணவாய், நுவி துரா கணவாய், துரா கணவாய்கள் இந்திய-திபெத் பகுதிகளை இணைக்கிறது.
மாவட்டங்களுகிடையே உள்ள கணவாய்கள்
தொகுபிதௌரகட் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களை இணைக்கும் கணேஷ் பாபா கணவாய், குங்ரி பிங்கிரி லா கணவாய், நாம கணவாய், சிங்லா, ராலம் கணவாய் கணவாய், கியோ துரா கணவாய், பெல்சா துரா கணவாய், கல்கங்கா துரா கணவாய், டிரய்ல்ஸ் கணவாய், கங்சால் துரா கணவாய், பிரெஜ்ரங் துரா கணவாய், யாங்க்சார் துரா கணவாய், ரூர் கான் கணவாய், பைந்தி கோல் கணவாய் மற்றும் லாங்ஸ்டாப் கோல் கணவாய் உள்ளது.
சமவெளிகள்
தொகுபிதௌரகட் மாவட்டத்தில் தரமாகங்கா அல்லது தர்ம சமவெளி, கோரிகங்கா சமவெளி, காளி சமவெளி, குத்தி சமவெளி, லஸ்சர் யாங்டி சமவெளி, ரல்லம் சமவெளி, குத்தி யாங்டி சமவெளி, ஜோகர் சமவெளி, காலபலாந்து சமவெளி, பைன்ஸ் சமவெளி, சௌதான் சமவெளி மற்றும் சௌர் சமவெளிகள் அமைந்துள்ளது.
அருவிகள்
தொகுபிதௌரகட் மாவட்டத்தில் லிம் பகுடியார் அருவி, பிர்த்தி அருவி, பில்சிட்டி அருவி, கரௌன் அருவிகள் அமைந்துள்ளது.
சுற்றுலான் & ஆன்மிகத் தலங்கள்
தொகுகஸ்தூரி மான் காப்பகம், அஸ்கோட், (திதிகோட் அருகில்), மற்றும் தார்சுலா மற்றும் ஆதி கைலாசம் அல்லது ஓம் மலை .[5]
ஏரிகள்
தொகுபிதௌரகட் மாவட்டத்தில் பார்வதி ஏரி, அஞ்சாரி ஏரி, ஜோலிங்கோங் ஏரி, சிப்லாகோட் ஏரி, மகேஷ்வரி குண்ட் ஏரி மற்றும் தம்ரி குண்ட் ஏரிகள் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Shorter, comfortable and less costlier route to Kailash Mansarovar inaugurated
- ↑ Kailash Mansarovar Yatra: Here's how you can reach Kailash Mansarovar through new route
- ↑ New road for Kailash Mansarovar pilgrims is ready, will cut travel time by three days
- ↑ http://www.census2011.co.in/census/district/580-pithoragarh.html
- ↑ Adi-Kailash (Chhota Kailash) OM PARVAT
- History of Kumaun by B D Pandey.
- Across Peaks and Passes of Kumaun Himalayas by Harish Kapadia.