தார்ச்சுலா

தார்ச்சுலா (Dharchula) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம், குமாவுன் கோட்டம், பிதௌரகட் மாவட்டத்தில் அமைந்த தார்ச்சுலா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். இமயமலையில் நேபாள எல்லையை ஒட்டியுள்ள பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள காலாபானி பகுதியில் உருவாகும் சாரதா ஆறு தார்ச்சுலா வழியாகப் பாய்கிறது.[1]

தார்ச்சுலா
சிற்றூர்
தார்ச்சுலா is located in Uttarakhand
தார்ச்சுலா
தார்ச்சுலா
தார்ச்சுலா is located in இந்தியா
தார்ச்சுலா
தார்ச்சுலா
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் வடகிழக்கில் தார்ச்சுலாவின் அமைவிடம் Lo
ஆள்கூறுகள்: 29°50′54.6″N 80°32′34.8″E / 29.848500°N 80.543000°E / 29.848500; 80.543000ஆள்கூறுகள்: 29°50′54.6″N 80°32′34.8″E / 29.848500°N 80.543000°E / 29.848500; 80.543000
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்பிதௌரகட்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்7,039
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண் -->262551
வாகனப் பதிவுUK
இணையதளம்https://pithoragarh.nic.in மற்றும் uk.gov.in


ஓம் பர்வதம் மற்றும் ஆதி கைலாசம்

பிதௌரகட் நகரத்திற்கு வடக்கே கயிலை மலை செல்லும் வழியில் 83 கிலோ மீட்டர் தொலைவில் தார்ச்சுலா நகரம் உள்ளது. நேபாளத்தில் இந்நகரத்தின் பெயரில் தார்ச்சுலா மாவட்டம் உள்ளது.

பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை நேபாளம் தனது என உரிமை கோருகிறது. [2][3]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, தார்ச்சுலா நகரத்தின் மக்கள்தொகை 7,039 ஆகும். அதில் ஆண்கள் 3,797 மற்றும் பெண்கள் 3,242 அகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 854 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 88.68% ஆகும். மக்களில் இந்து சமயம் 91.45%, கிறித்தவம் 0.67% மற்றும் சீக்கியம் 0.17% பயில்கின்றனர். [4]இந்நகரத்தில் ரூங் மலைவாழ் பழங்குடி மக்கள் பெரும்பானமையாக வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்தொகு

இதனையும் காண்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்ச்சுலா&oldid=2987085" இருந்து மீள்விக்கப்பட்டது