ஓம் பர்வதம்
ஓம் பர்வதம் (Om Parvat) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்திய-நேபாள எல்லையில் அமைந்த பிதௌரகட் மாவட்டத்தின் வடகிழக்கில் இமயமலையில் அமைந்துள்ளது. இதனருகில் ஆதி கைலாசம் உள்ளது.
ஓம் பர்வதம் | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 6,191 m (20,312 அடி) ![]() |
ஆள்கூறு | 30°12′00″N 81°15′00″E / 30.2000°N 81.2500°E |
புவியியல் | |
அமைவிடம் | பிதௌரகட் மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா |
மூலத் தொடர் | இமயமலை |
இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ஓம் பர்வதம் இந்தியப் பகுதில் "ஓம்" வடிவம் தெரியுமாறும், நேபாளத்தில் மலையின் பின்புறம் தெரியுமாறும் அமைந்துள்ளது. இமயமலைத் தொடரில் 6191 மீ உயரத்தில் அமைந்துள்ள மலையாக ஓம் பர்வதம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு லிட்டில் கைலாஷ், ஆதி கைலாஷ், பாபா கைலாஷ் மற்றும் ஜோங்லிங்கோங் சிகரம் என்ற பெயர்களும் உண்டு. 'ஓம்' (OM) அல்லது 'அம்' (AUM) என்ற வடிவத்தில் பனி படர்ந்திருக்கும் இந்த மலை இந்து, பௌத்தம் மற்றும் சமண மதங்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.
புனித நிலை தொகு
இம்மலையிலுள்ள பனிப்படிவு வடிவம் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் ஓம் (ॐ) என்ற வடிவத்தை ஒத்திருக்கிறது. அதன் தோற்றம் திபெத்தில் உள்ள கயிலை மலையை ஒத்திருக்கிறது.[1] ஓம் பர்வத்தின் அருகில் இந்துக்களுக்குப் புனிதமான பார்வதி ஏரி மற்றும் ஜோலிங்க்கோங் ஏரிகள் அமைந்துள்ளன.
சான்றுகள் தொகு
- ↑ American Alpine Journal, 2003, pp. 365-366. Available at AAJ Online (PDF) பரணிடப்பட்டது 27 செப்டம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்