மலை முகடு (Summit) என்பது உயரத்தில் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் விட உயர்ந்த இடமாகும். கணித முறையில், உயர அளவீட்டில் அண்மித்த பெருமம் ஆகும். இட அமைப்பியலில் சிகரம், "வான் உச்சி", "acme", "apex", "peak", summit என்பன ஒத்த சொற்களாம்.

உலகின் மிக உயரமான மலை முகடான எவரெசுட்டு மீது ஏறும் மலையேறிகள்.
சுவிட்சர்லாந்தின் மிக உயரிய ரோசா மலையின் மலை முகட்டிலிருந்து

உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெசுட்டு சிகரம் உள்ளது; இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8844.43 மீட்டர்கள் (29,029 அடி) ஆகும். இதனை அலுவல்முறையாக முதன்முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் இல்லரி. 1953இல் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.[1][2] பன்னாட்டு மலையேறுவோர் கூட்டமைப்பின் வரையறைப்படி மலை முகடொன்று 30 மீட்டர்s (98 அடி) மேலிருந்தாலே தனித்துவம் பெற்றதாகக் கொள்ளபடும். குறைந்தது 300 மீட்டர்s (980 அடி) உயர வேறுபாடு இருந்தால் தனி மலையாகக் கொள்ளப்படும். இவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

கலைச்சொல் உயர வேறுபாடு
கீழ் முகடு < 30 மீ
தனித்த மலை முகடு 30 மீ அல்லது மேல்
மலை 300 மீ அல்லது மேல்
குளிர்காலத்தில் ஈரானின் தாமாவந்து மலையின் முகடு
ஐக்கிய அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள மீயுயர் முகடு ஜெஃப் டேவிசு சிகரம்
எல்பிரஸ் மலையும் அதன் இரு மலை முகடுகளும் (காக்கேசியா, உருசியா)

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_முகடு&oldid=2800709" இருந்து மீள்விக்கப்பட்டது