எல்பிரஸ் மலை
எல்பிரஸ் மலை (Mount Elbrus; உருசியம்: Эльбру́с, ஒ.பெ El'brus, பஒஅ: [ɪlʲˈbrus]; காரச்சேபால்கர் மொழி: Минги тау, Min̡i taw, IPA: [miŋŋi taw] (Audio file "Miñitaw.ogg " not found)) என்பது சியார்சியா எல்லைக்கு அருகில், உருசியாவின் கபர்தினோ-பல்கரீயா, கராச்சாய்-செர்கேசியாவில் உள்ள மேற்கு காக்கசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள எரிமலை ஆகும். எல்பிரஸ் மலையின் சிகரம் உருசியாவிலும் ஐரோப்பியாவிலும் காக்கேசியாவிலும் உள்ள மலைகளில் உயரமானதும், உலகில் பத்தாவது உயர்வானதும் ஆகும்.
எல்பிரஸ் மலை | |
---|---|
எல்பிரஸ் மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 5,642 m (18,510 அடி)[1][2] |
புடைப்பு | 4,741 m (15,554 அடி) 10 வது |
பட்டியல்கள் | ஏழு கொடுமுடிகள் ஏழு எரிமலை கொடுமுடிகள் நாட்டின் உயரமானது அதிக உயரமானது |
புவியியல் | |
அமைவிடம் | உருசியா |
மூலத் தொடர் | காக்கசஸ் மலைத்தொடர் |
அமைப்பியல் வரைபடம் | எல்பிரசும் மேற்பகுதி பக்சன் பள்ளத்தாக்கும்[3][4] |
நிலவியல் | |
பாறையின் வயது | தெரியாது |
மலையின் வகை | சுழல்வடிவ எரிமலை (செயலற்றது) |
கடைசி வெடிப்பு | 50 கி.பி ± 50 வருடங்கள்[5] |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | (மேற்கு உச்சி) 1874 (கீழ் உச்சி) 22 சூலை 1829 |
எளிய வழி | Basic snow/ice climb |
எல்பிரஸ் இரு உச்சிகளைக் கொண்டுள்ளது. அவை இரண்டும் செயற்ற எரிமலைகளாகவுள்ளன. சற்று உயரமான மேற்கு உச்சி 5,642 மீட்டர்கள் (18,510 அடி)[2] உயரத்திலும் கிழக்கு உச்சி 5,621 மீட்டர்கள் (18,442 அடி) உயரத்திலும் அமைந்துள்ளன. தாழ்வான கிழக்கு உச்சியை 10 சூலை 1829 அன்று கிலார் கச்ரோ அடைந்தார்.[6][7][8] இதனை உருசியப் பேரரசின் அறிவியல் நோக்க வழிகாட்டலுக்கான நிகழ்த்தப்பட்டது. உயரமான உச்சியை (கிட்டத்தட்ட 20 m; 66 அடி) 1874 இல் ஆங்கிலேயர்களான எப். கிராபோட்டின் வழிநடத்தலில் பிரட்ரிக் காட்னர், கோராஸ் வோக்கர் ஆகியோருடன் சுவிட்சர்லாந்து வழிகாட்டி பீட்டர் நோபுல ஆகியோர் அடைந்தனர்.
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்துள்ள காக்கசஸ் கண்டங்களுக்கிடையேயான எல்லை என, பல்வேறு கருத்துகளின் மத்தியில் வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஐரோப்பாவின் உயரமான மலை என எல்பிரஸ் குறிப்பிடப்படுகிறது.[9]
சொல்லிலக்கணம்
தொகுஎல்பிரஸ் /ˈɛlbrəs/ எனும் பெயர் அல்போஸ் மலையின் ஒலியிடப்பெயர்வாகும்.[10] "அல்போஸ்" எனும் பெயர் ஈரானியப் புராணத்தில் உள்ள "கரா பெரேசயிடி" என்பதிலிருந்து பெறப்பட்டது.[10] கரா பெரேசயிடி என்பது கரா பிர்சயிடி என்பதைப் பிரதிபலிக்கிறது. பிர்சயிடி என்பது பிர்சன்ட்—"உயர்வு" என்பதன் பெயரெச்ச பெண்பால் வடிவமாகும். தற்கால பாரசீக மொழியில் பர்ஸ்/பெராசன்டே (உயரம், நேர்த்தி), போலண்ட் (உயர்வான, உயரமான) எனவும்[10] தற்கால குர்தி மொழியில் "பார்ஸ்" (உயர்வான, உயரமான) எனவும் அழைக்கப்படுகிறது. கரா "கவனி" அல்லது "பாதுகாத்துக் கொள்" எனவும், இந்திய-ஐரோப்பிய மொழிகள் மூலத்திலிருந்து செர்—"காப்பாற்று" எனவும் மொழிபெயர்க்கலாம்.[10]
மத்திய பாரசீகத்தில், கரா பெரேசயிடி என்பது காபோஸ் எனவும், மத்திய பாரசீக அல்போஸ் (வட ஈரானில் உள்ள நீண்ட மலைத்தொடரின் பெயரும்கூட) என்பது எல்பிரஸ் என்னும் பதத்துடன் தொடர்புள்ளது.[10]
பிற பெயர்கள்
தொகு- மிங்கி டாவ் (Mingi Taw) – கராச்சாய்–பலகார் (துருக்கிய மொழிகள்). மிங்கி டாவ் என்பது எல்லையற்ற மலை அல்லது ஆயிரம் மலை எனப் பொருள்படும்.
- இயால்புசி (Ialbuzi) – (கார்ட்வெலி மொழிகள்)
- அஸ்கார்டாவ் (Askartaw) – குமிகியான் (துருக்கிய மொழிகள்). பனிமிக்க மலைகள்
- ஆசாமா (ʔʷaːʂħamaːf) – (அடிகி மொழி)
- ஆசாக்மா (ʔʷaːɕħamaːxʷ) – (கபார்டியன் மொழி)
புவியியல் அமைப்பு
தொகுஎல்பிரஸ் பெரும் காக்கசசின் பிரதான தொடரிலிருநது வடக்கே 20 km (12 mi) தூரத்திலும், கிஸ்லோவோட்ஸ்கின் தென்-தென்மேற்கிலிருந்து 65 km (40 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் நிலையான பனிப்படுக்கை 22 பனியாறுகளைக் கொண்டுள்ளது.[11]
எல்பிரஸ் பகுதிகள் நகரும் புவி ஓட்டுப் பகுதியில் அமைந்து, பாறைத்தளங்களின் வெடிப்புடன் தொடர்புபட்டுள்ளது. பாறைக்குழம்பு அமைப்பு இயக்கமற்ற எரிமலையின் ஆழத்தில் அமைந்துள்ளது.[12]
மலைத் தோற்ற வரலாறு
தொகுஎல்பிரஸ் மலை 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. எரிமலை தற்போது இயக்கமற்றதாகக் கருதப்படுகிறது. கோலோசேன் காலத்தில் இது இயக்கியதான உலக எரிமலைத் திட்டம் தெரிவிக்கிறது. கடைசி எரிமலை வெடிப்பு கி.பி. 50 இல் ஏற்பட்டுள்ளது.[5] மலையில் காணப்படும் சில எரி கற்குழம்புகள் உட்பட்ட எரிமலை வெடிப்புக்கான சான்றுகள் புதியதாகவும் எரிமலை எச்சங்கள் கிட்டத்தட்ட 260 சதுர கிலோமீட்டர்கள் (100 sq mi) அளவுக்குக் காணப்படுகிறது. வடகிழக்கு உச்சிக்கு கீழான 24 கிலோமீட்டர்கள் (15 mi) அளவில் நீண்ட தடம் பரந்துள்ளது. ஏனைய எரிமலைச் செயற்பாடுகளாக புகை வெளிப்படும் துளைச் செயற்பாடுகள், வெந்நீரூற்றுகள் போன்றன உள்ளன. மேற்கு உச்சியில் சுமார் 250 மீட்டர்கள் (820 அடி) சுற்றளவிற்கு நன்றாகப் பாதுகாக்கப்பட்ட எரிமலை வாய் உள்ளது.[5]
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ The World Book Encyclopedia—Page 317 by World Book, Inc
- ↑ 2.0 2.1 Mt. Elbrus : Image of the Day. Earthobservatory.nasa.gov. Retrieved on 15 மே 2014.
- ↑ Mount Elbrus Map Sample. Ewpnet.com. Retrieved on 15 மே 2014.
- ↑ Mount Elbrus and Upper Baksan Valley Map and Guide (Map) (2nd ed.). 1:50,000 with mountaineering information. EWP Map Guides. Cartography by EWP. EWP. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-906227-95-4.
- ↑ 5.0 5.1 5.2 "Elbrus: Summary". Global Volcanism Program. Smithsonian Institution. Archived from the original on 17 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 25 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ ''Радде Г. И. Кавказский хребет // Живописная Россия. Т. 9. Кавказ, СПб., 1883. С. Mountain.ru. Retrieved on 15 May 2014.
- ↑ Miziev, I. M. "ФАКТЫ И СУЖДЕНИЯ", in Следы на Эльбрусе (из истории горного туризма и отечественного альпинизма)
- ↑ История восхождений. elbrus-top.ru
- ↑ Geographic Bureau. "Elbrus Region". பார்க்கப்பட்ட நாள் 5 January 2010.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 "Alborz" in Encyclopædia Iranica
- ↑ Caucasus from Elbrus to Kazbek (Map) (1st ed.). 1:200,000 with general information. Map Guides. Cartography by EWP. Robin Collomb and Andrew Wielochowski. 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-906227-54-2.
- ↑ "Observations of crustal tide strains in the Elbrus area". Izvestiya Physics of the Solid Earth (MAIK Nauka) 43 (11): 922–930. November 2007. doi:10.1134/S106935130711002X. Bibcode: 2007IzPSE..43..922M.
வெளி இணைப்புகள்
தொகு- Mount Elbrus on CHEBANDA
- Mount Elbrus on SummitPost
- "Elbrus, Mount." Encyclopædia Britannica. 2006. Encyclopædia Britannica Online. 14 நவம்பர் 2006 <http://www.britannica.com/eb/article-9032240>.
- Computer generated summit panoramas North South. There are a few discontinuities due to incomplete data.
- NASA Earth Observatory pages on Mount Elbrus: Mt. Elbrus (சூலை 2003) பரணிடப்பட்டது 2005-10-28 at the வந்தவழி இயந்திரம், Mt. Elbrus, Caucasus Range (நவம்பர் 2002) பரணிடப்பட்டது 2007-08-02 at the வந்தவழி இயந்திரம்
- Mt. Elbrus Expedition Cybercast Archives
- Elbrus Photos (Hundreds of large photographs of Mt. Elbrus and the vicinity)
- A trip report பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்