கார்ட்வெலி மொழிகள்
கார்ட்வெலி மொழிகள் காக்கசஸ் மலைத்தொடரில் பேசப்படும் மொழிக் குடும்பம். பெரும்பான்மையாக ஜோர்ஜியாவில் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 5.2 மில்லியன் மக்கள் கார்ட்வெலி மொழிகளை பேசுகின்றனர். உலகின் மற்ற மொழிக் குடும்பங்களுக்கும் கார்ட்வெலி மொழிகளுக்கும் ஒற்றுமை இல்லை. பல கார்ட்வெலி மொழிகளும் ஜோர்ஜிய எழுத்துமுறையால் எழுதப்படுகின்றன.[1][2][3]
கார்ட்வெலி மொழிகள் ქართველური
கார்த்வெலுரி | ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
மேற்கு காக்கசஸ், வடகிழக்கு அனதோலியா | |
மொழி வகைப்பாடு: | உலகின் முதன்மையான மொழிக் குடும்பங்களில் ஒன்று | |
துணைப்பிரிவு: |
சுவான் மொழி
கார்ட்டோ-சான்
| |
எத்னாலாக் குறி: | 17-1168 | |
ISO 639-5: | ccs | |
கார்ட்வெலி மொழிக் குடும்பத்தில் நான்கு மொழிகள் உள்ளன.
- சுவான் மொழி—35,000-40,000 மக்களால் ஜோர்ஜியாவின் வடமேற்கில் அமைந்த சுவனெட்டி பகுதியிலும் ஆப்காசியாவிலும் பேசப்படுகிறது.
- கார்ட்டோ-சான் பிரிவு
- ஜோர்ஜிய மொழி (கார்த்துலி) -- ஜோர்ஜியா நாட்டின் ஆட்சி மொழி. 4.5 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
- சான் பிரிவு
- மிங்கிரெலி மொழி (மார்கலூரி) -- ஜோர்ஜியாவின் மேற்கில் 5 லட்ச மக்களால் பேசப்படுகிறது.
- லாசு மொழி -- துருக்கி நாட்டின் வடகிழக்கிலும் ஜோர்ஜியாவின் தென்மேற்கிலும் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Israel". Ethnologue.
- ↑ "Browse by Language Family". Ethnologue.
- ↑ Judeo-Georgian at Glottolog