இடவியல் புடைப்பு
இடவியல் புடைப்பு (ஆங்கிலம்: Topographic prominence) என்பது நிலஉருவ இயல் அல்லது இடவிளக்கயியல் துறையில் (Topography) ஒரு மலை முகடு அல்லது ஒரு குன்றின் முகட்டு உயரத்தை அளவிடுவதைக் குறிப்பதாகும்.[1] இடவியல் துறையில் இது ஒரு பிரிவாக அறியப்படுகிறது.
ஒரு மலையைச் சுற்றியுள்ள நிலப்பகுதியின் மிகத் தாழ்வான உயரத்திற்கும், கடல் மட்டத்தில் இருந்து அந்த மலைச் சிகரத்தின் உயரத்திற்கும், இடைபட்ட உயர அளவில், காணப்படும் அளவு மாற்றங்களை இடவியல் புடைப்பின் வழி அறிந்து கொள்ளலாம்.
மலைமுகடு
தொகுமலை முகடு (Summit) என்பது உயரத்தில் அதைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் விட உயர்ந்த இடமாகும். இட அமைப்பியலில் சிகரம் எனும் வான் உச்சி என்பதைக் குறிப்பிடுவதாகும்.
பன்னாட்டு மலையேறுவோர் கூட்டமைப்பின் வரையறைப்படி ஒரு மலை முகடு 30 மீட்டர் உயரத்திற்கும் மேல் இருந்தால் அந்த மலைமுகடு தனித்துவம் பெற்றதாக அறியப்படுகிறது
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kirmse, Andrew; de Ferranti, Jonathan (December 2017). "Calculating the prominence and isolation of every mountain in the world". Progress in Physical Geography: Earth and Environment 41 (6): 788–802. doi:10.1177/0309133317738163. https://journals.sagepub.com/doi/10.1177/0309133317738163. பார்த்த நாள்: 8 May 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Summits தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Peak finder