லிபுலேக்

(லிபுலெக் கணவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லிபுலெக் கணவாய் (Lipulekh) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டத்தின் வடகிழக்கில் காலபானி பிரதேசத்தில், இமயமலையில் 5,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைகளை ஒட்டியுள்ளது.[1][2]

லிபு-லெக் கணவாய்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal Sudurpashchim Pradesh" does not exist.
ஏற்றம்5,200 மீ (17,060 அடி)
அமைவிடம்இந்தியாவின் உத்தராகண்ட், திபெத் மற்றும் நேபாள எல்லையில் லிபுலெக் கணவாயின் அமைவிடம்
மலைத் தொடர்இமயமலை
ஆள்கூறுகள்30°14′03″N 81°01′44″E / 30.234080°N 81.028805°E / 30.234080; 81.028805
லிபு-லெக் கணவாய் பகுதி

நேபாளம் எழுப்பும் எல்லைப் பிணக்கு

தொகு

நேபாளம் உரிமை கோருகிறது. லிபுலெக் கண்வாயின் தெற்கில் உள்ள காலாபானி சமவெளி மற்றும் மேற்கில் உள்ள லிம்பியாதூரா பகுதிகளை தனதென் தற்போது நேபாளம் உரிமை கோருகிறது. மேலும் நேபாளம் மே 2020-இல் வெளியிட்ட தனது நாட்டின் புதிய வரைபடத்திலும் தற்போது புதிதாக உரிமை கோரும் பகுதிகளைச் சேர்த்துக் காட்டியுள்ளது.[3] நேபாளத்தின் இச்செயலை இந்திய அரசு வன்மையாக கண்டித்துள்ளது.[4][5][6]

மேலும் இந்தியாவின் காலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் பகுதிகளை, நேபாள நாடாளுமன்றம் ஒரு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் நேபாளத்தில் வரைபடத்தில் இணைத்துள்ளதற்கு, இந்தியா கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.[7][8] காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகள் இந்தியாவின் பிதௌரகட் மாவட்டத்திற்கு உரியது என பழைய நில ஆவணங்களை இந்தியா வெளியிட்டுள்ளது.[9]


லிபுலெக் வழியாக கயிலை & மானசரோவர் யாத்திரை

தொகு

இந்தியாவிலிருந்து கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்காக, தார்ச்சுலா நகரத்திலிருந்து, இந்திய-திபெத் எல்லையைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில், இமயமலையில் 17,060 அடி உயரத்தில் அமைந்த லிபுலெக் கணவாய் வரை, 80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலையை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நிறுவியது. இச்சாலையை 8 மே 2020 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சி 8 மே 2020 அன்று திறந்து வைத்தார். [10]திபெத் எல்லையை ஒட்டிய லிபுலெக் கணவாய் வரை இந்திய அரசு புதிதாக சாலைகள் அமைத்துள்ளது. லிபுலெக் கணவாயிலிருந்து கயிலை மலை வரையான தொலைவு 96.6 கிலோ மீட்டர் மட்டுமே. [11]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. Limpiyadhura-Kalapani-Lipulekh dispute
 2. Ling, L.H.M.; Abdenur, Adriana Erthal; Banerjee, Payal (19 September 2016). India China: Rethinking Borders and Security. University of Michigan Press. pp. 49–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-472-13006-1.
 3. Nepal releases new map including Limpiyadhura, Lipulekh and Kalapani under its territory, vows to 'reclaim' them from India
 4. எல்லைக்கு உரிமை கொண்டாட வேண்டாம்: நேபாள அரசுக்கு இந்தியா எச்சரிக்கை
 5. Nepal officially releases new controversial map, shows Indian territories of Lipulekh, Kalapani, Limpiyadhura as its own
 6. இந்திய பகுதிகளுக்கு உரிமைகோரும் நேபாளம்; எல்லைக்கு படைகளை அனுப்பியது
 7. நேபாள வரைபடத்தில் இந்தியப் பகுதிகள்
 8. நேபாள வரைபடத்தில் இந்தியப் பகுதிகள்:இந்தியா எதிர்வினை
 9. காலாபானி,லிபுலெக் இந்தியாவின் பகுதி தான்: நில ஆவணங்களை உறுதி செய்து இந்தியா அறிவிப்பு
 10. Road link to Line of Actual Control achieved, faster route for Kailash-Mansarovar pilgrims and security forces
 11. New road will shorten Kailash Mansarovar yatra by six days

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிபுலேக்&oldid=3227452" இலிருந்து மீள்விக்கப்பட்டது