நாதூ லா கணவாய்
நாதூ லா கணவாய் என்பது இமயமலையில் உள்ள ஒரு கணவாய். இது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பண்டைய பட்டுப்பாதையின் ஒரு பகுதி. திபெத்திய மொழியில் நாதூ என்றால் கேட்கும் காதுகள் என்றும் லா என்றால் கணவாய் என்றும் பொருள். இக்கணவாய் சிக்கிமின் தலைநகரான கேங்டாக்கில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியர்கள் மட்டுமே இக்கணவாய்க்குச் செல்ல முடியும். அவர்களும் செல்வதற்கு முன்பு அனுமதிச்சீட்டு பெற்றே செல்ல வேண்டும்.[1]
நாதூ லா | |
---|---|
இந்தியப் பக்கத்து எல்லைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் | |
ஏற்றம் | 4,310 மீ (14,140 அடி) |
Traversed by | பழைய பட்டுப்பாதை |
அமைவிடம் | இந்தியா (சிக்கிம்) – சீனா (திபெத் தன்னாட்சிப் பகுதி) |
மலைத் தொடர் | இமயமலை |
ஆள்கூறுகள் | 27°23′11″N 88°49′52″E / 27.386448°N 88.831190°E |
நாதூ லா கணவாய் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் உள்ள மூன்று வணிகப்பாதைகளுள் ஒன்று. 1962-இல் இந்திய சீனப் போர் நடைபெற்ற பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் 1967-இல் இப்பகுதியில் இந்திய-சீனப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் இந்தியப்படைகள் வென்றது.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Nathu La – விளக்கம்
- விக்கிமேற்கோளில் Nathula சம்பந்தமான மேற்கோள்கள்:
- பொதுவகத்தில் நாதூ லா கணவாய் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.