விக்கிமேற்கோள்
விக்கி மேற்கோள் (Wikiquote), விக்கிப்பீடியாவை நடத்தும் விக்கிமீடியா நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் விக்கி மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இது புகழ்பெற்ற மக்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு மேற்கோள் களஞ்சியமாகும்.
விக்கிமேற்கோள் முகப்புப் பக்கம் | |
வலைத்தள வகை | மேற்கோள் கிடங்கு |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பன்மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
உருவாக்கியவர் | ஜிம்மி வேல்சும் விக்கிமீடியா சமூகமும் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்திற்குட்பட்டது |
அலெக்சா நிலை | 2,755[1] |
தற்போதைய நிலை | செயல்பாட்டில் உள்ளது |
உரலி | www.wikiquote.org |
இத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.[2]
தமிழில் விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Alexa rank
- ↑ தமிழ் விக்கிமேற்கோள் தளத்தை முடக்குவதற்கான பரிந்துரை, மேல்-விக்கியில் நடைபெற்ற உரையாடல்