விக்கிமீடியா நிறுவனம்
(விக்கிமீடியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விக்கிமீடியா நிறுவனம் என்பது, இலாபநோக்கமற்ற ஓர் அமெரிக்கத் தொண்டு நிறுவனமாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது. விக்கிப்பீடியா, விக்சனரி உட்பட பல தன்னார்வச் செயற்றிட்டங்களை பல மொழிகளில் இணையத்தில் முன்னெடுக்கிறது. இந்நிறுவனம் ஜிம்மி வேல்சினால், 20 சூன், 2003 இல் அறிவிக்கப்பட்டது.
விக்கிமீடியா அறக்கட்டளை சின்னம் | |
வகை | 501(c)(3) தொண்டு நிறுவனம் |
---|---|
நிறுவப்பட்டது | செயின்ட் பீட்டர்ஸ்பர்க், புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் சூன் 20, 2003 |
தலைமையகம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, அமெரிக்கா |
வேலைசெய்வோர் | டிங் சென் (குழுவின் தலைவர்) ஜிம்மி வேல்ஸ் (சேர்மன்) [1] சூ கார்ட்னர் (நிர்வாக இயக்குநர்) |
சேவை புரியும் பகுதி | உலகளவில் |
Focus | கட்டற்ற, திறந்த உள்ளடக்க, விக்கி அடிப்படையிலான இணைய திட்டங்கள் |
வழிமுறை | விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கி மேற்கோள், விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கிபொது, விக்கியினங்கள், விக்கி செய்திகள், விகிவேர்சிட்டி மற்றும் Wikimedia Incubator |
வருமானம் | US$ 10,632,254 (ஜூலை – டிசம்பர் 2009)[2] |
தன்னார்வலர் | 350,000 (2005)[3] |
பணியாளர் | 75 (ஜூலை 2011 வரை)[4] |
இணையத்தளம் | wikimediafoundation.org |
குறிக்கோள்கள்
தொகுவிக்கிமீடியா அறக்கட்டளையின் அறிவிக்கப்பட்ட இலக்கு திறந்த உள்ளடக்கம், விக்கி சார்ந்த திட்டங்கள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியன மற்றும் அந்த திட்டங்கள் முழு உள்ளடக்கங்களையும் பொதுவாக இலவசமாக வழங்குவது ஆகியன ஆகும்.[5]
திட்டங்கள்
தொகு- பல மொழியினரும் பொதுவாக அறியுப்படும் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா உடன், மேலும் பல திட்டங்கள் செயற்படுத்தப் படுகின்றன. இத்திட்டங்கள் அனைத்திலும், 250 க்கும் மேற்பட்ட மொழிகளில், பன்னாட்டினரும் பங்களிப்புச் செய்கின்றனர். அவை வருமாறு;-
- விக்சனரி (wiki+dictionary=wiktionary) என்ற திட்டத்தின் கீழ், விக்கி அகரமுதலி, தமிழ் உள்பட, பல மொழிகளில் வளர்ந்து வருகிறது.
- விக்கிசெய்திகள்: கட்டற்ற செய்திக் களமாகும். இது உலகளாவிய தன்னார்வலர்கள் தாமாகவே செய்திகளை உடனுக்குடன் மேலேற்றம் செய்யும் முறையாகும்.
- விக்கிமூலம்: இதனை விக்கிநூலகம் எனலாம். இதில் படவடிவிலும், எழுத்துவடிவிலும் நூல்கள், பலவேறு வடிவங்களில் மேம்படுத்தப்படுகின்றன.
- விக்கிமேற்கோள்: உலக அறிஞர்களின் புகழ் பெற்ற சொற்றொடர்கள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவற்றினை எழுதலாம்.
- விக்கிநூல்கள்: இந்த திட்டத்தின் வழியே, நீங்கள் விரும்பும் பாடத்தினை நூலாக எழுதலாம்.
- விக்கியினங்கள்: உயிரியல் வகைப்பாட்டியல் படி, உயிரினங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இது முழுமையான உயிரியல் வகைப்பாட்டு தளமாகும்.
- விக்கிமீடியா பொதுவகம் என்ற திட்டத்தின் கீழ், நிழற்படங்கள், நிகழ்படங்கள்(காணொளி), அசைப்படங்கள் போன்ற ஊடகங்கள் பேணப்படுகின்றன.
- விக்கித்தரவுகள்: ஒரே மாதிரியான தரவுகள் எண்களைக் கொண்டு, மொழியியல் அடிப்படையில், கணினியியல் நுட்பத்தில் வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் மொழிபெயர்ப்பும், நமது தேடுதலுக்கு ஒப்ப விடையும் உடனடியாக எடுக்கும் படி எடுக்க பங்களிக்கலாம். புதியவர்களும் எளிதில் பங்களிக்கலாம்.
- இவை தவிர, விக்கிப்பல்கலைக்கழகம், விக்கிப்பயணம், விக்கிமேப்பியா திட்டங்கள் செயற்படுகின்றன. ஆனால் அதில் தமிழ் பங்களிப்பாளர்கள் இல்லை எனலாம்.
- மீடியாவிக்கி என்பது இவை அனைத்தையும் கட்டி காத்து மேம்படுத்தும் மென்பொருள் பிரிவாகும். இதிலும் பங்களிப்பு செய்யலாம்.
- மேல்-விக்கி என்பது மேற்கூறிய அனைத்தும் செயற்படும் முறைகளை ஆய்வு செய்யும், வழிநடத்தும் பிரிவாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cbrown1023. "Board of Trustees". Wikimedia Foundation. Archived from the original on 2008-01-17. பார்க்கப்பட்ட நாள் 2008-01-19.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) CS1 maint: unfit URL (link) - ↑ 2009 Mid Year Financials
- ↑ (பிரெஞ்சு) Open for business (2007), Jaap Bloem & Menno van Doorn (trad. Audrey Vuillermier), éd. VINT, 2007 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-75414-20-2), p. 93. No official number available since 2006
- ↑ "Staff Page (Homepage from Wikimeda)". Wikimedia Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-02-07.
- ↑ Devouard, Florence. "Mission statement". Wikimedia Foundation. Archived from the original on 2008-01-17. பார்க்கப்பட்ட நாள் 2008-01-28.
{{cite web}}
: Text "Florence Devouard" ignored (help)CS1 maint: unfit URL (link)
காட்சியகம்
தொகு-
விக்சனரி
-
விக்கிசெய்திகள்
-
விக்கிமூலம்
-
விக்கிநூல்கள்
-
விக்கிமேற்கோள்
-
பொதுவகம்
-
விக்கித்தரவு
-
மீடியாவிக்கி