விக்சனரி
விக்சனரி (Wiktionary) என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் விக்கிமீடியா நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகிறது. வணிக நோக்கற்ற இந்த அகரமுதலியை இலவசமாக எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; பங்கேற்கவும் முடியும்.
விக்சனரி இணையத்தளத்தின் திரைப்பிடிப்பு காட்சி | |
வலைத்தள வகை | இணைய அகரமுதலி |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பன்மொழி (170 மேல்) |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
உருவாக்கியவர் | சிம்மி வேல்சு மற்றும் விக்கிமீடியா சமுதாயம் |
மகுட வாசகம் | இணையப் பன்மொழி அகரமுதலி |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | Optional |
வெளியீடு | 2002 டிசம்பர் 12 |
அலெக்சா நிலை | 823[1] |
தற்போதைய நிலை | செயல் நிலையில் |
உரலி | http://ta.wiktionary.org/ |
விக்கிப்பீடியாவைப் போன்றே விக்சனரிகளும் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. விக்சனரியில் சொற்களுக்குப் பொருள் தவிர விளக்கம், பயன்பாடு, சொற்பிறப்பியல், இணை சொற்கள், சொல்வளம் ஆகியவையும் தர வாய்ப்புள்ளது. ஒரு மொழியில் உருவாக்கப்படும் விக்சனரியில் அம்மொழி தவிர, பிற மொழிச் சொற்களும் இடம்பெறலாம்.
விக்சனரி வரலாறு
தொகுஇணையத்தில் விக்சனரியின் தோற்றம் 2002 டிசம்பர் 12 ஆம் திகதி உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் அல்லாத முதல் மொழி விக்சனரியாக 2004 மார்ச்சு 28 ஆம் திகதி பிரஞ்சு மற்றும் பொலிசு மொழி அகரமுதலிகள் தோற்றப்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ஏனைய மொழிகளிலும் விக்சனரிகள் தோற்றம் பெறத்தொடங்கின.
விக்சனரி தோற்றம் பெற்ற காலகட்டத்தில் அதன் இணைய முகவரியாக (wiktionary.wikipedia.org) என்றே 2004 மே 1 ஆம் திகதி வரை இருந்தது. தற்போது விக்சனரியின் இணைய முகவரியாக (www.wiktionary.org) [2] என்றுள்ளது.
தமிழ் விக்சனரி வரலாறு
தொகு- முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்சனரி
மேற்கோள்கள்
தொகு- ↑ Alexa rank
- ↑ விக்சனரியின் தற்போதைய இணைய முகவரி www.wiktionary.org.
வெளி இணைப்புகள்
தொகு