தமிழ் விக்சனரி
தமிழ் விக்சனரியின் பலன்
தமிழ் விக்சனரி என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், ஒலிப்பு (பலுக்கல்;உச்சரிப்பு), எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தொடர்கள் முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். தமிழ்-தமிழ், ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பிரன்சிய மொழி, சிங்களம், மலேய மொழி போன்ற பிற மொழிச் சொற்களிலும் இதில் விளக்கம் பெற முடியும். இத்திட்டம் விக்கியூடக நிறுவனத்தின் தமிழ் திட்டங்களில் ஒன்றாக, 2004 ஆம் ஆண்டு, சூலை 24 நாளன்று தொடங்கப்பட்டது.
வலைத்தள வகை | இணையதள களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | தமிழ் |
உரிமையாளர் | விக்கியூடக நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
உரலி | http://ta.wiktionary.org |
புள்ளிவிபரங்கள்
தொகு- சொற்கள்: 2,42,970[1]
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ தமிழ் விக்சனரி புள்ளிவிவரங்கள், 17, ஏப்ரல், 2012.