தமிழ் விக்கிப்பீடியா

விக்கிப்பீடியாவின், 'தமிழ் விக்கிக் கலைக்களஞ்சியம்' அல்லது 'விக்கி தமிழ்க் கலைக்களஞ்சியம்'.


தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia, சுருக்கமாக தமிழ் விக்கி), விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003இல் இது தொடங்கப்பட்டது. 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது[2]. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2014 மே மாதக் கணிப்பின் படி, 62ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.[3] தற்போதைய நிலவரப்படி 2,23,745 பதிவுசெய்யப்பட்ட பயனர்களும், 1,57,252 கட்டுரைகளும் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில், முதல் இடத்திலும், தமிழ் விக்கி உள்ளது. குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள், தமிழ் இரண்டாவதாக உள்ளது.மே 2017 அன்று 100,000 கட்டுரைகளைத் தாண்டியது.[4] 2019 நவம்பர் மாதக் கணக்கின்படி, 59ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. வரலாற்று நோக்கில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை, இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க, இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.

தமிழ் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தமிழ் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttps://ta.wikipedia.org/

தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள் தொகு

 • பக்கங்கள் = 4,98,104
 • கட்டுரைகள் = 1,57,252
 • கோப்புகள் = 8,084
 • தொகுப்புகள் = 37,84,303
 • பயனர்கள் = 2,23,745
 • சிறப்பு பங்களிப்பாளர்கள் = 251
 • தானியங்கிகள் = 190
 • நிருவாகிகள் = 35
 • அலுவலர்கள் = 3
ஆகத்து 31, 2023 இன் படி கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள்
மொழி[5](அகரவரிசைப்படி) கட்டுரைகளின் எண்ணிக்கை[6]
அசாமிய மொழி விக்கிப்பீடியா (as)
12,043
இந்தி விக்கிப்பீடியா (hi)
1,58,767
ஒடியா மொழி விக்கிப்பீடியா (or)
17,166
கன்னட விக்கிப்பீடியா (kn)
30,337
காசுமீரி மொழி விக்கிப்பீடியா* (ks)
4,525
குசராத்தி விக்கிப்பீடியா (gu)
30,242
வடமொழி விக்கிப்பீடியா (sa)
12,078
சிந்தி மொழி விக்கிப்பீடியா* (sd)
15,474
தமிழ் விக்கிப்பீடியா (ta)
1,56,694
தெலுங்கு விக்கிப்பீடியா (te)
85,810
நேபால் பாசா விக்கிப்பீடியா (new)
72,345
நேபாளி மொழி விக்கிப்பீடியா (ne)
32,066
பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா (pa)
51,030
பாளி விக்கிப்பீடியா* (pi)
2,548
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி விக்கிப்பீடியா (bpy)
25,086
போச்புரி விக்கிப்பீடியா (bh)
8,523
மராத்தி விக்கிப்பீடியா (mr)
93,226
மலையாள விக்கிப்பீடியா (ml)
84,408
வங்காள விக்கிப்பீடியா (bn)
1,41,037

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-05-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-03 அன்று பார்க்கப்பட்டது.
 2. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009
 3. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
 4. of Wikipedias
 5. List of Indian language wiki projects
 6. Wikipedia Statistics

வெளி இணைப்புகள் தொகு