மானசரோவர்
மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும்.[1] மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலைமலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். இந்தப் பிரதிபிம்பம் ’சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்’ என்ற கருத்தில் ’கௌரி சங்கர்’ என்று அழைக்கப்படுகிறது. இக்குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும்.
மானசரோவர் | |
---|---|
அமைவிடம் | திபெத் |
ஆள்கூறுகள் | 30°40′25.68″N 81°28′07.90″E / 30.6738000°N 81.4688611°E |
மேற்பரப்பளவு | 320 km2 (120 sq mi) |
அதிகபட்ச ஆழம் | 90 m (300 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 4,556 m (14,948 அடி) |
உறைவு | குளிகாலத்தில் |
இதன் அருகே இராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த இராட்சதலம் ஏரியின் தீவில் இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.இந்த ஏரி மானசரோவருக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. கைலாச யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்த ராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது.
புவியியல் அமைப்பு (மூலத்தை தொகு)
தொகுமானசரோவர் ஏாி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மிக உயரத்தில் அமைந்துள்ள தூய நீர் ஏாியாகும். பொதுவாக உப்பு நீர் ஏாிகள் திபெத்திய பீடபூமிகளில் அமைந்திருக்கும். மானசரோவர் ஏாி வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 88 கிலோ மீட்டர் ஆகும். இதன் ஆழம் மிக அதிக அளவான 90 மீ ஆழம். இதன் அடிப்பரப்பளவு 123.6 சதுர மைல்கள். மானசரோவர் ஏாியானது, இராட்சதலம் ஏரியுடன் கங்கா கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளது. மானசரோவர் ஏாியிலிருந்து சத்லஜ் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, சிந்து ஆறு போன்ற முக்கிய ஆறுகள் உற்பத்தியாகிறது.
மானசரோவர் ஏாியில் உள்ள நீர் வழிந்து ராக்ஸ்டல் உப்புநீர் ஏாியில் சேருகிறது. இவ்விரு ஏாிகளும் சட்லெஜ் நதி பாயும் நிலப்பகுதியின் ஒரு பகுதியான உள்ளன. ஆனால் பாறைகள் சிதைவுற்றதால் இரு வேறு பகுதிகளாக பிாிந்து காணப்படுகிறது.
அடிச்சொல் வரலாறு
தொகுமானசரோவர் என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகும். இது 'மானா' மற்றும் 'சரோவர்' என்ற இரு சொற்கள் சேர்ந்து மானசரோவர் என்று உருவானது. மானா என்றால் மனம் என்றும் சரோவர் என்றால் ஏாி என்றும் பொருள். இந்து மதத்தின்படி முதலில் ஏாி, படைக்கும் கடவுள் பிரம்மாவின் மனதில் தோன்றியது. பின்பு இவ்வோியானது பூமியில் தோற்றுவிக்கப்பட்டது.
மதத்தின் முக்கியத்துவம்
தொகுஇந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு இது மிக புனிதமான தீர்த்தமாக பார்கப்படுகிறது.
இந்து மதம்
தொகுஇந்து மதத்தின்படி மானசரோவர் ஏாியை தூய்மைக்கு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த ஏாியின் நீரைப் பருகினால் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது. கைலாயமலையைப் போலவே, மானசரோவர் ஏாியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர். இவ்வோியில் நீராடினாலும், இவ்வோி நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இவ்வோியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனித பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் 'கைலாச–மானசரோவர் யாத்திரை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பயணத்தின் போது யாத்ரீகர்கள் இவ்வோி நீாில் புனித நீராடி மகிழ்கின்றனர்.
மானசரோவர் ஏாியானது பல காலங்களுக்கு முன்பாகவே ஆசிய நதிகளான பிரம்மபுத்திரா, காகரா, சிந்து மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் மூலமாக யாத்ரீகர்களால் கருதப்பட்டது. எனவே யாத்ரீகர்கள் இவ்விடத்தை மையப்பகுதியாக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே வந்து சென்று கொண்டிருக்கின்றனர். சாம்டோ போருக்குப்பின், இப்பகுதியானது யாத்ரீகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 1951-லிருந்து 1981-வரை வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 1980-க்குப் பிறகு மறுபடியும் இந்திய யாத்ரீகர்களின் காலடிச் சுவடுகள் பதியத் தொடங்கின.
இந்து மதத்தின்படி, மானசரோவர் ஏாியானது ஹம்சாவின் கோடை வாசத்தலமாக விளங்கியது. இவ்விடம் புனித இடமாகக் கருதப்படுவதால், துணைக் கண்டத்தில் மெய்யறிவு மற்றும் அழகு இவற்றின் முக்கிய அடையாளமாக ஹம்சா திகழ்கின்றது. இந்துமத இறைமை நூலின்படி, 5 புனித ஏாிகளான மானசரோவர், பிந்துசரோவர், நாராயண்சரோவர், பாம்பாசரோவர் மற்றும் பிந்துசரோவர்.
புத்தமதத்தில்
தொகுபுத்தமதத்தவர்கள் மானசரோவர் ஏாியை பழமையான ஏாியான அனவதாப்தா ஏாியுடன் தொடர்பு படுத்துகின்றனர். இந்த ஏாியின் கரையில் துறவிகளின் மடங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது பழமையான ஜியு மடம், இது மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மலையிலிருந்து செதுக்கப்பட்டதைப் போன்று தோற்றமளிக்கிறது. புத்தமத இலக்கியத்தில் இந்த ஏாி மிகவும் பிரபலமானது. இது பல்வேறு கதைகளுடன் தொடர்புடையது. புத்தர் பல்வேறு தருணங்களில் இங்கு சென்று தங்கி தியானத்தில் ஈடுபடுவார். மானசரோவர் ஏாி திபெத்திய பாரம்பாியத்தின் அணிகலனாக திகழ்கிறது. தியானத்தைப் பற்றிய புதிய விளக்கம் இராபர்ட் தர்மன்னால் பிரபலப்படுத்தப்பட்டடது.
ஜைன மதத்தில்
தொகுஜைன மதத்தில், மானசரோவர் ஏாி முதலாம் தீர்த்தங்கரரான ரிசபநாதருடன் தொடர்புடையது.
பிராந்திய நிலப்பகுதி
தொகுகடல் மட்டத்திற்கு 4941 மீ. உயரம் மற்றும் 495 சதுர கி.மீ. அளவும் அமையப்பெற்ற பொிய ஏாி இதுவாகும். அங்பா டிசோ என்ற ஏாியானது திபெத்திய பீடபூமியில் 33 டிகிாி 24 வடக்கு 90 டிகிாி 17 கிழக்கில் அமைந்துள்ளது. திபெத்திய பீடபூமியில் உள்ள பொிய சுத்தநீர் ஏாியான பூமா யும்கோ கடல் மட்டத்திலிருந்து 5000 மீ. உயரத்தில் உள்ளது.
தட்பவெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், மானசரோவர் ஏரி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | -2.7 (27.1) |
-1.5 (29.3) |
1.3 (34.3) |
6.7 (44.1) |
10.5 (50.9) |
13.7 (56.7) |
13.6 (56.5) |
13.1 (55.6) |
11.1 (52) |
6.6 (43.9) |
1.5 (34.7) |
-0.8 (30.6) |
6.09 (42.97) |
தினசரி சராசரி °C (°F) | -8.2 (17.2) |
-6.9 (19.6) |
-3.7 (25.3) |
0.3 (32.5) |
3.5 (38.3) |
7.3 (45.1) |
8.5 (47.3) |
8.2 (46.8) |
5.6 (42.1) |
0.2 (32.4) |
-4.5 (23.9) |
-6.6 (20.1) |
0.31 (32.56) |
தாழ் சராசரி °C (°F) | -13.6 (7.5) |
-12.3 (9.9) |
-8.6 (16.5) |
-6.0 (21.2) |
-3.4 (25.9) |
1.0 (33.8) |
3.4 (38.1) |
3.3 (37.9) |
0.1 (32.2) |
-6.2 (20.8) |
-10.4 (13.3) |
-12.4 (9.7) |
−5.43 (22.24) |
பொழிவு mm (inches) | 58 (2.28) |
39 (1.54) |
58 (2.28) |
34 (1.34) |
29 (1.14) |
46 (1.81) |
142 (5.59) |
152 (5.98) |
76 (2.99) |
32 (1.26) |
8 (0.31) |
20 (0.79) |
694 (27.32) |
ஆதாரம்: Climate-Data.org |
இதனையும் காண்க
தொகுதுணை நூல்
தொகு- கைலாஸ் மானசரோவர் யாத்திரை; எழுதியவர் சுவாமி கமலாத்மானந்தர்;சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியீடு