இராட்சதலம் ஏரி

இராட்சதலம் ஏரி (Lake Rakshastal) என்பது திபெத் தன்னாட்சிப் பகுதியில், இமயமலைத் தொடரில், கயிலை மலைக்கு தெற்கே, மானசரோவர் ஏரிக்கு மேற்கே அமைந்துள்ள உவர் நீர் ஏரி ஆகும்.[1] சத்லஜ் ஆறு இராட்சதலம ஏரியின் வடமேற்கு முனையில் உற்பத்தியாகிறது. மானசரோவர் ஏரியிலிருந்து மேற்கே 3.7 கிமீ தொலைவில் அமைந்த இந்த ஏரியை புனித தீர்த்தமாக கருதுவதில்லை. எனவே கயிலை மலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் இராட்சதலம் ஏரியில் தீர்த்தமாடுவதில்லை.

இராட்சதலம் ஏரி
இடப்புறத்தில் இராட்சதலம் ஏரி, வலப்புறம் மானசரோவர் ஏரி
அமைவிடம்திபெத் தன்னாட்சிப் பகுதி
ஆள்கூறுகள்30°39′N 81°15′E / 30.65°N 81.25°E / 30.65; 81.25
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவுஇராவண ஏரி

பெயர்க்காரணம்

தொகு
 
இராட்சதலம் ஏரியிலிருந்து கயிலை மலையின் தெற்கு முகம்

இந்து சமயச் சாத்திரங்கள் இந்த ஏரியை இராட்சதர்களின் ஏரி என்பதால், இதனை இராட்சத ஏரி என அழைக்கப்படுகிறது. மேலும் இராவணின் இந்த ஏரிப் பகுதியில், சிவபெருமானை நோக்கி இராவணன் தவம் செய்ததாக அறியப்படுகிறது.[2]

பௌத்த சமயத்தில், மானசரோவர் ஏரி வட்டமாக சூரிய வடிவத்திலும், இராட்சதலம் ஏரி பிறை வடிவத்திலும் குறிப்பிடுவதால், அவைகள் முறையே ஒளி மிக்கது என்றும் இருள்படர்ந்தது எனக் குறிப்பிடுகிறது.

புவியியல்

தொகு

250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இராட்சதலம் ஏரி, கடல் மட்டத்திலிருந்து 4,575 மீட்டர் உயரத்தில் இமயமலையின் திபெத்தில் உள்ளது. இந்த ஏரி சிவப்பு மற்றும் அடர் நீல நிறங்களில் காட்சியளிக்கிறது.

இராட்சதலம் ஏரியில் இரண்டு பெரிய தீவுகளும், இரண்டு சிறிய தீவுகள் என நான்கு தீவுகள் கொண்டது.[3] குளிர்காலத்தில் இத்தீவுகள் யாக் போன்ற கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது.

இராட்சதலம் ஏரியின் நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாகும். எனவே இராட்சதலம் ஏரியில் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதில்லை.

தட்பவெப்பம்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Taruna Vijaya (2001). Kailash Manasarovar, an odyssey in Tibet. Ritwik Prakashan. p. 58. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
  2. Pradeep Chamaria (1996). Kailash Manasarovar on the Rugged Road to Revelation. Abhinav Publications. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-336-6. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
  3. "Archived copy". Archived from the original on 2010-11-05. பார்க்கப்பட்ட நாள் 2010-10-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராட்சதலம்_ஏரி&oldid=4060280" இலிருந்து மீள்விக்கப்பட்டது