சமோலி மாவட்டம்

சமோலி மாவட்டம் (Chamoli district) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் இரண்டாவது பெரிய மாவட்டமாகும்.[1] 8,030 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் தலைமையிடம் கோபேஸ்வரர் நகரமாகும். புதுதில்லியிலிருந்து 443 கி. மீ., தொலைவிலும்,[2]அரித்துவாரிலிருந்து 124 கி. மீ., தொலைவிலும் சமோலி மாவட்டம் அமைந்துள்ளது.[3] இம்மாவட்டதை தேசிய நெடுஞ்சாலை எண் 58, புதுதில்லிக்கு அருகே உள்ள காசியாபாத் நகரத்துடன் இணைக்கிறது.

சமோலி மாவட்டம்
चमोली ज़िला
மாவட்டம்
உத்தரகண்ட மாநிலத்தில் சமோலி மாவட்ட அமைவிடம்
உத்தரகண்ட மாநிலத்தில் சமோலி மாவட்ட அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்கார்வால்
தலைமையிடம்கோபேஸ்வர்
பரப்பளவு855 கி. மீ2சீனா உரிமை கோருகிறது
 • மொத்தம்8,030 km2 (3,100 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,91,605
 • அடர்த்தி49/km2 (130/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மற்றும் கார்வாலி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்chamoli.nic.in

மாவட்ட எல்லைகள் தொகு

இம்மாவட்டத்தின் வடக்கில் சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதி, கிழக்கில் உத்தராகண்டத்தின் பித்தோரகர் மாவட்டம் மற்றும் பாகேஸ்வர் மாவட்டம் மேற்கில் ருத்ரபிரயாக் மாவட்டம், வடமேற்கில் உத்தரகாசி மாவட்டம் மற்றும் தெற்கில் அல்மோரா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் தொகு

 
பத்ரிநாத் கோயில்
நான்கு சிறு கோயில்கள்
   
கேதாரிநாத் பத்ரிநாத்
   
கங்கோத்ரி யமுனோத்திரி

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,91,605 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 193,991 மற்றும் பெண்கள் 197,614 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1019 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 49 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 82.65% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 93.40% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.32% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 52,161 ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தில் இந்து சமய மக்கள் தொகை 98.52 % ஆக உள்ளது.

புவியியல் தொகு

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் முதல் 7000 மீட்டர் உயரம் வரை, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. குளிர்காலம் நவம்பர் முதல் மார்ச்சு மாதம் வரை உள்ளது. மழைகாலம் சூன் முதல் செப்டம்பர் வரை தொடர்கிறது. அலக்நந்தா ஆறு தேவபிரயாகையில் பாகீரதி ஆற்றில் கலக்கும் வரை, இம்மாவட்டத்தில் 229 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்கிறது.

அலக்நந்தா ஆறு தேவபிரயாகையில் பாகீரதி ஆற்றில் கலக்கும் வரை, இம்மாவட்டத்தில் 229 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்கிறது.

அரசியல் தொகு

இம்மாவட்டம், பத்ரிநாத், தாரலி (தலித்), கர்ணபிரயாகை என மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

பொருளாதாரம் தொகு

சுற்றுலாத் துறையே இம்மாவட்டத்தின் முக்கிய வருவாய் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Chamoli district at a glance" (PDF).
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-20. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
  3. http://distancebetween2.com/haridwar/chamoli
  4. http://www.census2011.co.in/census/district/575-chamoli.html

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமோலி_மாவட்டம்&oldid=3583902" இலிருந்து மீள்விக்கப்பட்டது