ஹேமகுண்டம்

ஹேமகுண்டம் (Hemkund Sahib, Hemkunt), சீக்கிய வழிபாட்டுத் தலமாகும். இது இந்திய மாநிலமான உத்தராகண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதை குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப் என்று அழைக்கின்றனர். இது பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கை வழிபடும் இடமாகும். இவர் இயற்றிய தசம் கிரந்த் என்ற நூலிலும் இந்த இடத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த இடத்தில் பனிப்படர்ந்த ஏரியும், இதைச் சுற்றி ஏழு மலைக்குன்றுகளும் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத் தலம் இமயமலையில், 4632 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[1]இது ஜோஷி மடத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஹேம்குண்ட் சாகிப்
பஞ்சாபி மொழி: ਹੇਮਕੁੰਟ ਸਾਹਿਬ
இந்தி: हेमकुंड साहिब
Hemkund Sahib
ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப்
வழிபாட்டுத் தலம் (குருத்வாரா)
குருத்வாரா ஹேம்குண்ட் சாகிப்
குருத்வாரா ஹேம்குண்ட் சாகிப்
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்சமோலி மாவட்டம்
ஏற்றம்
4,632.96 m (15,200.00 ft)
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
249401
வாகனப் பதிவுUK
இணையதளம்www.hemkunt.in

சொற்பொருள்

தொகு

ஹேம்குண்ட் என்ற சொல், ஹேம, குண்ட ஆகிய சமசுகிருதச் சொற்களால் ஆனது. ஹேம என்ற சொல்லுக்கு பனி என்றும், குண்ட என்ற சொல்லுக்கு பாத்திரம் என்றும் பொருள். தசம் கிரந்த் என்ற நூல், இவ்விடத்தில் குரு நாட்டு மன்னர் பாண்டு யோகக் கலை பயின்றதாக குறிப்பிடுகிறது. [2]

 
ஹேம்குண்ட் ஏரி

போக்குவரத்து

தொகு

தில்லியில் இருந்து வருவோர், அரித்துவார் வரை தொடர்வண்டியில் வந்து, பின்னர் அங்கிருந்து ரிசிகேசு வழியாக கோவிந்த்கட் என்ற இடைத்தை பேருந்து மூலமாக வந்தடையலாம்.

படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Hemkunt Sahib at Google maps Satellite view: lake, Gurudwara building on west shore, zigzag pilgrim path from Ghanghariya (2 km west) to west shore. Terrain view: Hemkund Sahib at 4,200 m, Ghanghariua at 3,100 m.
  2. Robin Rinehart (2014): The Dasam Granth. In Oxford Handbook of Sikh Studies. Oxford: The Oxford University Press, p.138

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹேமகுண்டம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமகுண்டம்&oldid=3640425" இலிருந்து மீள்விக்கப்பட்டது