முதன்மை பட்டியைத் திறக்கவும்

குரு நாடு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

குரு அல்லது குரு நாடு (Kuru) (சமக்கிருதம்: कुरु) நடு வேத காலத்திய, வட இந்திய, ஆரிய நாடுகளில் ஒன்றாகும். தற்கால தில்லி, அரியானா, உத்தரகாண்ட், மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் தோவாப் பிரதேசம் முதல் கோசாம்பி வரை குரு நாட்டின் பகுதிகளாக இருந்தது. குரு நாடு ஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது. குரு நாட்டை நிறுவியவர் மன்னர் குரு ஆவார்.

பெயர்க் காரணம்தொகு

அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர் ஒருவர் (குரு) குருச்சேத்திரத்தில் கடும் தவம், தான, தருமங்கள் செய்த காரணத்தினால் அம்மன்னர் ஆண்ட நாட்டை குரு நாடு என அழைக்கப்பட்டது.

அமைவிடம்தொகு

 
மகாஜனபத காலத்திய குரு நாடும்; பிற நாடுகளும்

குரு நாட்டின் கிழக்கில் திரௌபதி பிறந்த பாஞ்சாலம், வட மேற்கில் சகுனி பிறந்த காந்தார நாடு மற்றும் காம்போஜம், தெற்கில் கிருஷ்ணன் பிறந்த சூரசேனம் மற்றும் மத்ஸய நாடும் எல்லைகளாகக் கொண்டது.

வரலாறுதொகு

சந்திர குல மன்னர் நகுசனின் மகன் யயாதியின் கடைசி மகன் புரு ஆவார். புருவின் 25 தலைமுறைகளுக்குப் பின் பிறந்தவர் மன்னர் குரு. குருவிற்கு 15 தலைமுறைக்குப் பின் பிறந்தவர்கள் பாண்டவர் மற்றும் கௌரவர். யயாதியின் மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்களே யது குலத்தினர் ஆவார். யது குலத்தின் உட்கிளையான விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்களே கிருஷ்ணன், சுபத்திரை மற்றும் பலராமன் ஆவார்.

குரு நாட்டின் தலைநகரம் கங்கை ஆற்றாங்கரையில் அமைந்த அத்தினாபுரம் ஆகும். இத்தலைநகரின் வளமான பெரும் பகுதிகள் திருதராட்டினும் அவர்தம் மக்கள் கௌரவர்களும் ஆண்டனர். திருதராட்டிரனின் தம்பி பாண்டுவின் மகன்களாக பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தம் நகரத்தை நிறுவி, குரு நாட்டின் கிழக்குப் பகுதிகளை பிரித்துக் கொண்டு ஆண்டனர்.

குரு நாட்டின் சிறப்பும், வீழ்ச்சியும்தொகு

வியாசரின் மகாபாரத காவியத்தில் குரு நாட்டையும், அதன் மன்னர்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. வேத காலத்திய குரு நாட்டை ஆண்ட தருமன், பரிட்சித்து, ஜனமேஜயன் போன்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், அரசியல் மற்றும் பண்பாடு சிறந்து விளங்கியது. குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் கி மு 850 முதல் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த குரு நாடு, மகாஜனபாத காலத்தில், கி மு 500-இல் மறைந்தது.

மன்னர் குருவின் தலைமுறை அட்டவணைதொகு

சந்திர குல மன்னர் நகுசனின் மகன் யயாதியின் கடைசி மகன் புரு ஆவார். புருவின் 25 தலைமுறைகளுக்குப் பின் பிறந்தவர் மன்னர் குரு. குருவிற்கு 15 தலைமுறைக்குப் பின் பிறந்தவர்கள் பாண்டவர் மற்றும் கௌரவர்.

பிரதிபன்சுனந்தா
கங்கைசந்தனுசத்தியவதிபராசரர்பாக்லீகர்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்)(அம்பாலிகா மூலம்)(தாசி மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்

இதனையும் காண்கதொகு

 
குரு நாட்டின் கழுகு வடிவ வேள்வி மேடையும், வேள்வி செய்தவதற்கான யாகக் கரண்டி போன்றவைகள். (மாதிரிகள்)

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

மேலும் படிக்கதொகு

முன்னர்
'
குரு நாடு
(கி மு 1,200 – கி மு 800)
பின்னர்
நந்த வம்சம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_நாடு&oldid=2556689" இருந்து மீள்விக்கப்பட்டது