பாஞ்சாலம் (Panchala) (சமஸ்கிருதம்: पञ्चाल}}, பண்டைய வட இந்தியாவில் கங்கைச் சமவெளியில் அமைந்த பிந்தைய வேத காலமான கி மு 850 முதல் 500 முடிய இருந்த 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். பாஞ்சால நாடு, தற்கால தெற்கு உத்தராகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டது. பாஞ்சால நாடு தனதருகில் இருந்த குரு நாட்டுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தது.[1] பாஞ்சால நாட்டின் தெற்கு பகுதிக்கு காம்பில்யம் நகரமும்; வடக்கு பகுதிக்கு அகிசத்திரா நகரமும் தலைநகராகங்களாக விளங்கியது.

அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூல் குறிப்பிடும் பதினாறு மகா ஜனபதங்களில் ஒன்றாகும்

கி மு 322 – 185-க்கு இடைப்பட்ட பகுதியில் மகத நாட்டின் மௌரியப் பேரரசின் கீழ் சென்றது. கி மு நான்காம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் கீழ் பாஞ்சால நாடு மீண்டும் தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக விளங்கியது.

புவியியல் பரப்பு

தொகு

பாஞ்சால நாட்டின் பகுதியாக தற்கால உத்தராகண்ட் மாநிலப் பகுதிகள் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரூக்காபாது மாவட்டம் மற்றும் பதாவுன் மாவட்டங்களை கொண்டிருந்தது. பாஞ்சால நாடு, வடக்கு பாஞ்சாலம், தெற்கு பாஞ்சாலம் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. வடக்கு பாஞ்சால நாட்டுப் பகுதியின் தலைமையிடமாக தற்கால பரேலி மாவட்டத்தில் உள்ள இராம்நகர் எனும் சத்திராவதி அல்லது அத்ஹிசத்திராவும்; தெற்கு பாஞ்சால நாட்டுப் பகுதிக்கு தலைமையிட நகரமாக தற்கால பரூக்காபாத் மாவட்டத்தில் இருந்த காம்பில்யம் நகரம் விளங்கியது. புகழ் பெற்ற கன்யாகுப்ஜம் என்று அழைக்கப்பட்ட கன்னோசி நகரம் பாஞ்சால நாட்டில் இருந்தது.

பிந்தைய வேத காலத்தில் பாஞ்சால நாடு

தொகு

மேற்கில் பஞ்சாப் பகுதியிலிருந்து வெளியேறி, கிழக்கில் குடியேறிய பிந்தைய வேத காலத்திய ஆரியர்களின் இரண்டாம் அரசியல் மையமாக பாஞ்சாலம் விளங்கியது.

மகாபாரத குறிப்புகள்

தொகு

மகாபாரதம் எனும் இதிகாசத்தின் மூலம் பாஞ்சால நாடு பற்றிய குறிப்புகள் அதிக அளவில் உள்ளது. பாண்டவர்கள், பாஞ்சால நாட்டு இளவரசி திரௌபதியை மணந்தது குறித்தும்; பாஞ்சால மன்னன் துருபதன், இளவரசர்கள் திருட்டத்துயும்னன், சிகண்டி குறித்து அறியப்படுகிறது. துருபதனை வென்ற துரோணரின் சீடன் அருச்சுனன் பாஞ்சால நாட்டை வென்று, பாஞ்சால நாட்டின் வடக்கு பகுதிக்கு அசுவத்தாமன் பட்டம் சூட்டப்பட்டதையும் அறிய இயலுகிறது.

குருச்சேத்திரப் போரில்

தொகு

குருச்சேத்திரப் போரில், பாஞ்சால நாட்டுப் படைகள் பாண்டவர் அணி சார்பாக நின்று கௌரவர் அணிக்கு எதிராகப் போரிட்டனர். பாண்டவப் படைகளின் தலைமைப் படைத்தலவராக திருட்டத்துயும்னன் நியமிக்கப்பட்டார். கௌரவப் படைகளின் தலைமைப் படைத்தலைவரான பீஷ்மரை, பதினைந்தாம் நாள் போரில், துருபதன் மகன் சிகண்டி வீழ்த்தினார்.[2][3]பின்னர் கௌரவப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக நியமிக்கப்பட்ட துரோணரை திருட்டத்துயும்னன் கொன்றார். பதினெட்டாம் நாள் போரின் இரவில், அசுவத்தாமனால், திருட்டத்துயும்னன் முதலானவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர்
பாஞ்சாலம்
(கி மு 850 –500)
பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்சாலம்&oldid=4057709" இலிருந்து மீள்விக்கப்பட்டது