நந்த அரசமரபு

(நந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நந்த வம்சம், வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர்.இமரபினர் கிமு 4-ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டை ஆண்டுவந்தனர்.[3] சிசுநாக மரபைச் சேர்ந்த மகாநந்தி என்பவருக்கு பிறந்த மகாபத்ம நந்தன் நந்த அரச மரபைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது.

நந்த அரசமரபு
துல்லியமாகத் தெரியவில்லை; கி. மு. 5ஆம் நூற்றாண்டு அல்லது கி. மு. 4ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி எனப் பலவாறாக காலமிடப்படுகிறது–அண் கி. மு. 322
நந்தப் பேரரசின் கடைசி ஆட்சியாளர் தனநந்தனின் (அண் கி. மு. 325) சாத்தியமான வகையிலே இப்பேரரசின் பரப்பு.[1]
நந்தப் பேரரசின் கடைசி ஆட்சியாளர் தனநந்தனின் (அண் கி. மு. 325) சாத்தியமான வகையிலே இப்பேரரசின் பரப்பு.[1]
தலைநகரம்பாடலிபுத்திரம்
சமயம்
இந்து சமயம்
பௌத்தம்
சைனம்[2]
அரசாங்கம்முடியரசு
மகாராஜா 
வரலாற்று சகாப்தம்இந்தியாவின் இரும்புக் காலம்
• தொடக்கம்
துல்லியமாகத் தெரியவில்லை; கி. மு. 5ஆம் நூற்றாண்டு அல்லது கி. மு. 4ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி எனப் பலவாறாக காலமிடப்படுகிறது
• முடிவு
அண் கி. மு. 322
முந்தையது
பின்னையது
சிசுநாக வம்சம்
மகாஜனபதம்
மௌரியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்வங்காளதேசம்
இந்தியா
நேபாளம்
ஆசியாவில் கி மு 323ல் நந்தப் பேரரசின் வரைபடம்

மகாபத்ம நந்தன் என்னும் பெயருடன் இவர் அரசு கட்டில் ஏறினார். தனது 88 வயது வரை வாழ்ந்து ஆட்சி புரிந்ததால், சுமார் 100 ஆண்டுகள் வரை நிலைத்திருந்த இந்த அரச மரபினரின் காலத்தில் பெரும்பகுதி இவன் ஆட்சிக்காலத்துள் அடங்குகிறது. நந்தப் பேரரசு உச்ச நிலையில் இருந்த காலத்தில் அதன் ஆட்சிப்பகுதி பீகாரில் இருந்து மேற்கே வங்காளம் வரை பரந்திருந்தது. நந்தப் பேரரசு பின்னர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியனால் தோற்கடிக்கப்பட்டது.

நந்த அரசமரபின் முதல் மன்னனான மகாபத்ம நந்தன் சத்திரியர்களை அழித்தவர் என வர்ணிக்கப்படுகின்றான். , இச்வாகு மரபினர், பாஞ்சாலம், காசி நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகம், குரு நாடு, மைதிலியர், சூரசேனம், விதிகோத்திரர் போன்றோரை வெற்றி கொண்டார். இவன் தனது நாட்டை தக்காணத்துக்குத் தெற்குப் பகுதி வரை விரிவாக்கினார்.

நந்த மரபின் கடைசி மன்னன் தன நந்தன் என்பவன் ஆவான். கிரேக்க, இலத்தீன் நூல்களில் இவர் க்சந்ராமேஸ் (Xandrames) அல்லது அக்ராமேஸ் (Aggrammes) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றான். கொடுமைகள் காரணமாக மக்கள் வெறுத்ததாகவும், அதனால் தான் இம் மன்னனை வெற்றிகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் சந்திரகுப்த மௌரியன் கூறியதாக புளூட்ராக் என்னும் நூல் கூறுகிறது.

சிசுநாகர் மரபினரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நந்தர்கள் சத்திரியர் அல்லாத மரபைச் சார்ந்தவர்கள். வட இந்தியாவை ஆண்ட சத்திரியர் அல்லாத அரச மரபினருள் இவர் முதல்வர். இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் இவர் என்றும் சொல்லப்படுவது உண்டு. மகத நாட்டின் ஆட்சியைப் பெற்றுக்கொண்ட இவர்கள், அதனை மேலும் விரிவாக்கினர். இதற்காக 200,000 பேர் கொண்ட காலாட்படை, 2000 தேர்கள், 3000 போர் யானைகள் என்பவை கொண்ட படையைக் கட்டியெழுப்பினர். புளூட்ராக் நூலின்படி இவர்கள் படை இதைவிடவும் பெரியதாகும்.

சாணக்கியர் உதவியுடன் இறுதி நந்தப் பேரரசர் தன நந்தனை வென்றார் சந்திரகுப்த மௌரியர். தன நந்தன் காலத்தில் கிரேக்கப் பேரரசர் அலெக்சாண்டர் சிந்து ஆற்றைக் கடந்து இந்தியா மீது படையெடுத்தார்.

சங்கப்பாடல் குறிப்பு

தொகு
மாமூலனார் என்னும் சங்ககாலப் புலவர் தன் தமிழ்ப் பாடலில் நந்தன் என்னும் இந்த வமிசத்து அரசன் தன் செல்வத்தைக் கங்கையாற்றில் மறைத்து வைத்திருந்தது பற்றிக் குறிப்பிடுகிறார். இவன் தனநந்தன் எனக் கொள்ளத் தகும்.

புகழ் பெற்ற நந்த வம்ச மன்னர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 145, map XIV.1 (a). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
  2. M. B. Chande (1998). Kautilyan Arthasastra. Atlantic Publishers. p. 313. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171567331. During the period of the Nanda Dynasty, the Hindu, Buddha and Jain religions had under their sway the population of the Empire
  3. https://books.google.co.in/books?id=YoAwor58utYC&redir_esc=y Age of the Nandas and Mauryas
முன்னர் நந்த வம்சம் பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்த_அரசமரபு&oldid=4043879" இலிருந்து மீள்விக்கப்பட்டது