ஹேஹேய நாடு (Heheya Kingdom) என்பது தற்கால மத்தியப் பிரதேசத்தில் பாயும் நர்மதை ஆற்றாங்கரையில் அமைந்த மகிழ்மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு மத்திய மற்றும் மேற்கு இந்தியாவை பண்டைய சந்திர குல சத்திரிய மன்னர்கள் ஆண்ட நாடாகும். ஹேஹேய நாட்டை ஆண்ட மன்னர்களுள் புகழ் பெற்றவர் இராவணனை போரில் வென்ற கார்த்தவீரிய அருச்சுனன் ஆவார். பரத கண்டத்து நாடுகளில் ஒன்றாக ஹேஹேய நாடு குறிக்கப்பட்டுள்ளது.

பரத கண்டத்தில் ஹேஹேய நாடு

இதிகாச, புராணக் கதைகளின் படி கோடாரியை ஆயுதமாகக் கொண்ட போர்க்குணம் படைத்த அந்தணரான பரசுராமரின் கோபத்தால் கார்த்தவீரிய அருச்சுனன் கொல்லப்பட்டதால், ஹேஹேய நாடு வீழ்ச்சி கண்டது.

மகாபாரதக் குறிப்புகள் தொகு

இராமனின் முன்னோரான, அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்ட இச்வாகு குலத்து சத்திரிய மன்னர் சகரன், வதச நாட்டின் ஹேஹேயர்களையும், தாலஜங்கர்களையும் வென்றான் என்பதை மகாபாரதம் (3-106) மூலம் அறிய முடிகிறது.

வத்ச நாட்டு ஹேஹேயர்கள் தொகு

மகாபாரதக் குறிப்புகளின்படி ( 13,30) வத்ச நாட்டின் ஹேஹேயர்கள் விராத்திய சத்திரிய குலத்தவர் என்றும்; [1] காசி நாட்டை வென்றவர்கள் என்றும்; பின்னர் வந்த காசி நாட்டு மன்னன் பிரதார்த்தனால், ஹேஹேயர்கள் வத்ச நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டார்கள் என்றும் அறிய முடிகிறது.

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேஹேய_நாடு&oldid=3388851" இலிருந்து மீள்விக்கப்பட்டது