மகிழ்மதி அல்லது மகிஷ்மதி (Mahishmati) இராமாயணம், மகாபாரதம் காவியங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் கூறும் மத்திய இந்தியாவில் தற்கால மத்தியப் பிரதேசத்தில் இருந்த அவந்தி நாட்டின் பண்டைய நகரம் ஆகும். அனுப நாட்டின் தலைநகராக மகிழ்மதி நகரம் இருந்ததாகக் கருதப்படுகிறது. இந்நகரத்தின் தற்காலப் பெயர் மஹேஷ்வர் நகரம் ஆகும்.

பலர் மகிழ்மதி நகரம் தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாயும் நர்மதா ஆற்றின் கரையில் அமைந்திருந்ததாக கருதுகிறார்கள்.

இருந்ததாக கருதப்படும் பகுதிகள் தொகு

மத்திய இந்தியாவில் மகிழ்மதி நகரம் இருந்ததாக கருதப்படும் பகுதிகள்;

 
 
மகேஸ்வர்
 
மாந்தாதா
 
மண்டலா
மகிழ்மதி நகரம் இருந்ததாக கருதப்படும் பகுதிகள்

இராமாயணத்தில் தொகு

பரசுராமரால் கொல்லப்பட்ட சந்திர வம்சத்தின் யது குல மன்னர் கார்த்தவீரிய அருச்சுனன் ஆண்ட ஹேஹேய நாட்டின் தலைநகராக மகிழ்மதி இருந்ததாக மகாபாரத காவியம் (13:52) குறிப்பிடுகிறது. [1] இராமாயண காவியத்தில் அரக்கர்களின் தலைவனான இராவணனின் ஆளுகைக்குட்பட்ட மத்திய இந்தியாவின் விந்திய மலைப் பகுதியின் தெற்கே உள்ள பஞ்சவடி, தண்டகாரண்யம் போன்ற பகுதிகளை ஆண்ட கர தூஷணாதிகளின் தலைநகராகவும் மகிழ்மதி இருந்தது என கூறுகிறது.[2]

மகாபாரதத்தில் தொகு

குருச்சேத்திரப் போரில் மகிழ்மதி நாட்டு மன்னர் (2:30) நீலன் கௌரவர் சார்பாக பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு சகாதேவனால் மாண்டவர் என மகாபாரதம் (5:19,167) கூறுகிறது.

மௌரியப் பேரரசுக்கும் அதற்குப் பின்பும் வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையே மகிழ்மதி, வணிகர்களின் சந்திப்பு நகரமாக விளங்கியது.

வரலாற்றில் தொகு

காலச்சூரி பேரரசு காலத்தில் மகிழ்மதி நகரம் காலச்சூரி நாட்டின் தலைநகராக விளங்கியது.[3]ஆதிசங்கரர் மகிழ்மதி நகரத்தில் வாழ்ந்த குமரிலபட்டரின் சீடரான மந்தன மிஸ்ரரை வாதப் போரில் வென்று சுரேஷ்வரர் எனப் பெயரிட்டு, தனது சீடராக்கிக் கொண்டார்.

திரைப்படத்தில் தொகு

பாகுபலி திரைப்படத்தில் காண்பிக்கப்படும் ஒரு நாட்டின் பெயருக்கு மகிழ்மதி என வைத்துள்ளனர்.[4]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிழ்மதி&oldid=3375527" இருந்து மீள்விக்கப்பட்டது