அவந்தி
அவந்தி (Avanti) (சமஸ்கிருதம்:अवन्ति) பண்டைய இந்தியாவின் பிற்கால வேத காலத்தில் இருந்த நாடாகும். தற்கால மால்வா பகுதியே, வேத கால அவந்தி நாடாகும்.
அங்குத்தர நிகாயம் எனும் பௌத்த சமய நூலின் படி அவந்தி நாடு, கி மு ஆறாம் நூற்றாண்டில் இருந்த 16 குடியாட்சி நாடுகளில் ஒன்றாக விளங்கியது என அறியப்படுகிறது.
அவந்தி நாட்டின் வடக்கு பகுதிக்கு உஜ்ஜைன் நகரமும்; தெற்கு பகுதிக்கு மகிழ்மதி நகரமும் மையமாக திகழ்ந்தது.[1][2]
மகாபாரதம் எனும் இதிகாசத்தின் உத்யோகப் பருவத்தில் (19.24) அவந்தி மக்களை, அதிக சக்தி கொண்ட மக்கள் எனப் போற்றுகிறது.[3] விஷ்ணு புராணம் (II.3), பாகவத புராணம் (XII.I.36) மற்றும் பிரம்ம புராணம் (XIX.17), போன்ற புராணங்களில், மாளவம், சௌராஷ்டிரம் போன்ற பகுதிகளுடன் அவந்தி நாட்டை தொடர்பு படுத்தி பேசப்படுகிறது.[4][5]
ஆட்சியாளர்கள்
தொகுபுராணங்களின் படி மகிழ்மதி மற்றும் உஜ்ஜைன் நகரங்களைத் தலைநகராகக் கொண்டு ஹேஹேயர்கள் (Haihayas) முதலில் ஆண்டனர். பின்னர் சிசுநாக வம்சம், நந்தர் மற்றும் மௌரியப் பேரரசு காலத்தில் அவந்தி நாடு மகத நாட்டின் ஆட்சியின் கீழ் சென்றது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mahajan, V.D. (1960, reprint 2007). Ancient India, New Delhi:S. Chand, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0887-6, p.233
- ↑ Raychaudhuri, H.C. (1972). Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp.85,129-30
- ↑ Law, B.C. (1973). Tribes in Ancient India, Bhandarkar Oriental Series No.4, Poona: Bhandarkar Oriental Research Institute, pp.337-43
- ↑ Law, B.C. (1973). Tribes in Ancient India, Bhandarkar Oriental Series No.4, Poona: Bhandarkar Oriental Research Institute, p.63
- ↑ Gokhale, B. G. (1962). Samudra Gupta: Life and Times. New Delhi: Asia Publishing House. p. 18.
- ↑ Raychaudhuri, H.C. (1972). Political History of Ancient India, Calcutta: University of Calcutta, p.256