சுரேஷ்வரர்

சுரேஷ்வரர் அல்லது சுரேஷ்வராச்சாரியார் (Sureśvara or Sureśvarācārya), கி. பி. 750இல் வாழ்ந்த அத்வைத வேதாந்தாதி. இவரின் இயற்பெயர் மந்தன மிஸ்ரர். ஆதிசங்கரரின் தலைமைச் சீடர். சங்கரரின் ஆணைப்படி சிருங்கேரியில் சாரதா பீடம் அமைத்து, அதன் முதல் பீடாதிபதியானவர். சுரேஷ்வரர் சங்கரரை விட வயதில் மூத்தவராகவும் இல்லறத்தவராகவும் இருந்தவர்.

ஆதிசங்கரருடன், சீடர்கள் பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்

வாழ்க்கை

தொகு

சங்கரரின் சீடராக ஆவதற்கு முன் மந்தன மிஸ்ரர் என்ற பெயரில், மீமாம்ச தத்துவவாதியாக இருந்த இல்லறத்தவர். சங்கரருடன் நடந்த விவாதப் போட்டியில் தோல்வியடைந்த மந்தன மிஸ்ரர், இல்லறத்தை விட்டு, துறவறம் மேற்கொண்டு, சங்கரரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். ஆதிசங்கரர் உரை எழுதிய உபநித நூல்களுக்கு சுரேஷ்வரர் நீண்ட விளக்க உரைகள் எழுதியுள்ளார். எனவே இவரை வார்த்திககாரர் (நீண்ட விளக்க உரையாசிரியர்) என்பர். சிருங்கேரியில் சிருங்கேரி சாரதா பீடத்தை நிறுவி அதன் முதல் பீடாதிபதியாக விளங்கியவர்.

எழுதிய நூல்கள்

தொகு

அத்வைத வேதாந்த தத்துவத்தை எளிமையாகவும், விளக்கமாகவும், விளக்கும் வகையில் பல விளக்க நூல்களை இயற்றியுள்ளார்.[1]

  • பிரகதாரண்யக உபநிடத வார்த்திகம் (சங்கரரின் பிரகதாரண்யக உபநிடத உரைக்கு விளக்க நூல்)
  • நைஸ்கர்மியசித்தி [2]
  • சம்பந்த வார்த்திகம் (சங்கர்ரின் பிருகதாரண்யக உபநிடத அறிமுக உரைக்கு விளக்க நூல்)
  • தைத்திரிய வார்த்திகம் (சங்கரரின் தைத்திரிய உபநிடத உரைக்கு விளக்க நூல்)
  • சங்கரரின் தட்சணாமூர்த்தி ஸ்தோத்திர நூலுக்கு விளக்க உரை நூல்
  • பஞ்சீகரணம் வார்த்திகம் (சங்கரரின் பஞ்சீகரண பாஷ்யத்திற்கான விளக்க உரை நூல்)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் சிருங்கேரி சாரதா மடம்
820–834 [1]
பின்னர்
நித்தியபோதகனர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்வரர்&oldid=4055793" இலிருந்து மீள்விக்கப்பட்டது