சிருங்கேரி சாரதா மடம்

சிருங்கேரி சாரதா பீடம் அல்லது சிருங்கேரி சாரதா மடம் (Sringeri Sharadha Mutt), ({{கன்னடம்|ಶೃಂಗೇರಿ ಶಾರದಾ ಪೀಠ}}), தென்னிந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம். யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர். மங்களூருவிலிருந்து 105 கி. மீ. தொலைவிலும், பெங்களூரிலிருந்து 303 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தற்போதைய பீடாதிபதி: ஸ்ரீ பாரதி தீர்த்தர்
அமைவிடம் சிருங்கேரி
நிறுவியவர் ஆதிசங்கரர்
முதல் பீடாதிபதி சுரேஷ்வரர்
நிறுவிய ஆண்டு கி. பி. 820
இணையதளம் http://www.sringeri.net/
சிருங்கேரி சாரதா பீடத்தில் அமைந்த சரஸ்வதி கோயில்

பெருவாரியான ஸ்மார்த்தர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள்.[web 1] கிபி 1336ல் விஜயநகரப் பேரரசை நிறுவ வழிகாட்டிய வித்யாரண்யர், இம்மடத்தின் தலைமைப் பொறுப்ப்பில் இருந்தவர்.

மேற்கோள்கள்தொகு

  1. "Hinduism-guide.com, Hinduism: Details about "Smarta"". 2013-11-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  • Kuppuswami Sastri, S. (1984), Brahmasiddhi, by Maṇḍanamiśra, with commentary by Śankhapāṇī. 2nd ed., Delhi, India: Sri Satguru Publications
  • Roodurmum, Pulasth Soobah (2002), Bhāmatī and Vivaraṇa Schools of Advaita Vedānta: A Critical Approach, Delhi: Motilal Banarsidass Publishers Private Limited
  • Sen, Surendranath (1930), Studies in Indian history, University of Calcutta

வெளி இணைப்புகள்தொகு