பத்மபாதர் அல்லது பத்மபாதாச்சாரியார், (Padmapadacharya) எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த அத்வைத வேதாந்தவாதி. ஆதிசங்கரரின் நான்கு முக்கிய சீடரில் முதல்வர். மற்ற சீடர்கள், சுரேஷ்வரர், தோடகர், அஸ்தாமலகர் ஆவர். பத்மபாதர் புரி நகரத்தின் கோவர்தன பீடத்தின் முதல் மடாதிபதியாக விளங்கியவர். ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர விளக்கத்திற்கு, பத்மபாதர் பஞ்சபாதிகா எனும் விரிவான விளக்க உரை நூல் எழுதியுள்ளார்.[1][2]

ஆதிசங்கரருடன், சீடர்கள் பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்

மேலும் படிக்க

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. SANKARACARYA'S DISCIPLES
  2. Sri Padmapadacharya
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மபாதர்&oldid=4055792" இலிருந்து மீள்விக்கப்பட்டது