அஸ்தாமலகர்

அஸ்தாமலகர் அல்லது அஸ்தமலாகாச்சாரியார் (Hastamalakacharya) (IAST Hastāmalakācārya) எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. ஆதிசங்கரரை தனது குருவாக கொண்டவர். ஆதிசங்கரரின் அறிவுரைப்படி, துவாரகை அத்வைத மடத்தை நிறுவி, கி. பி., 820 முதல் அதன் முதல் மடாதிபதியாக விளங்கியவர்.

ஆதிசங்கரருடன், சீடர்கள் பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்

ஆதிசங்கரருடன் சந்திப்பு

தொகு

உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் ஒரு அந்தணரின் வேண்டுதலுக்கு இணங்க ஆதிசங்கரர் பிட்சைக்கு (உணவுக்கு) அந்தணரின் வீட்டிற்கு சென்ற போது, அந்தணர் தன் மகன் பிறந்ததிலிருந்து வாய் பேசாது ஊமையாக இருப்பதை சங்கரரிடம் கூறினார். சங்கரர் அச்சிறுவனிடம் நீ யார்? எனக் கேட்க, அப்போது அச்சிறுவன் 14 செய்யுள்களில் அத்வைத தத்துவத்தை பாடிக் காட்டினான்.[1] சங்கரர் அச்சிறுவனுக்கு ஹஸ்தாமலகர் (சமசுகிருத மொழியில், ஹஸ்தம் எனில் கை, அம்லா எனில் நெல்லிக்கனி) (உள்ளங்கை நெல்லிக் கனி) எனப் பெயரிட்டு தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்தாமலகர்&oldid=3232585" இலிருந்து மீள்விக்கப்பட்டது