துவாரகை மடம்
துவாரகை மடம் அல்லது துவாரகை பீடம் (Dwaraka pīţha or Dwaraka maţha), இந்தியாவின், குஜராத் மாநிலத்தில், இன்றைய தேவபூமி துவாரகை மாவட்டத்தின் கடற்கரை நகரான துவாரகையில், ஆதிசங்கரரால் எட்டாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட அத்வைத மடமாகும்.[1] சாம வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மடத்தை காளி மடம் என்றும் அழைப்பர்.
இம்மடத்தின் முதல் மடாதிபதியாக இருந்தவர், ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான அஸ்தாமலகர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Pasricha, Prem C. (1977) The Whole Thing the Real Thing, Delhi Photo Company, p. 59-63