இராமாயணத்தில் அயோத்தியின் மன்னன் தசரதனின் மனைவியருள் கைகேயி தனது சோடி மந்தரையின் போதனையால் தனது மகன் பரதனுக்கு கோசலநாட்டையும், அதன் அரசபதவியையும் பெறும் நோக்கில் தசரதனிடம் இரண்டு வரங்களை பெறுகிறாள். அதன் விளைவாய் அரசனாக முடிசூட்ட இருந்த இராமன் 14 வருடம் வனவாசம் செல்கிறான். சீதை, இலக்குமணன் இருவரும் அவனுடன் செல்கின்றனர்.

அயோத்தியிலிருந்து தெற்கு நோக்கி சென்ற இராமன், ஜனஸ்தானத்தில் இருந்த முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்தப் பகுதியில் தங்க சம்மதிக்கிறான். அகத்திய முனிவர் குறிப்பிடும் ஐந்து ஆலமரக்கூட்டம் இருந்த இடத்திற்கு சென்று தங்குமாறு கூறுகிறார். அந்த இடத்திற்கு ஜனஸ்தானத்தில் இருந்த முனிவர்கள் வைத்த பெயர் பஞ்சவடி.[1]

பஞ்சவடி தற்போதைய மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் சீதையை இராவணன் இலங்கைக்குக் கடத்திச் சென்றான் என இராமாயணம் மூலம் அறியமுடிகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Panchavati Nashik". Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-08-01.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சவடி&oldid=3878467" இலிருந்து மீள்விக்கப்பட்டது