சத்திரியர்

சத்திரியர் என்போர் பண்டைய வடஇந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் சத்திரியர்கள் பிராமணருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மநுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, சத்திரியர் பிரிவில் ஆள்வோரும், போர்த்தொழில் புரிவோரும் அடங்குவர். இதிகாசங்களில் வரும், இராமன், கிருஷ்ணன் ஆகியோரும், புத்த சமய நிறுவனரான கௌதம புத்தர், சமண சமயத்தைத் தோற்றுவித்த சத்திரியர் ஆகியோரும் சத்திரியர்களே. தென்னிந்தியாவை பொருத்த மட்டில் அங்கே உண்மையான சத்திரியர் மற்றும் வைசியர் வர்ணங்கள் இல்லை என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்து[1].

கௌதம புத்தர் புத்த சமய நிறுவனரான கௌதம புத்த சத்திரியராக பிறந்தவர்

சத்திரியர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், நிலவுடமை ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர்.

தென்னிந்தியாவில் வர்ணம் நடைமுறையில் இருந்தது இல்லை என்று கருதப்படுகிறது. மெட்ராஸ் சென்ஸஸ் 1901 அறிக்கையில் சத்திரியர் 1 சதவிகிதம் மற்றும் வைசியர் 1.5 சதவிகிதம் என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது[2]. தமிழகத்தில் வர்ண கோட்பாடு நடைமுறையில் இல்லாததினால் ஆங்கிலேயர்கள் பிராமணர் அல்லாத  அனைத்து மக்களையும் சூத்திரர் என்று வகுத்துள்ளனர். சூத்திரர்கள் முறையே சட்-சூத்திரர் (நல்ல சூத்திரர்) மற்றும் பிற சூத்திரர் என்று வகுக்க பட்டுள்ளனர்[3]. இதில் சட்-சூத்திரர்கள் மாமிசம் உண்ணாமல் பிராமண சடங்குகளை பிராமணரை நியமித்து பின்பற்றுபவர்கள்‌.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திரியர்&oldid=3458738" இருந்து மீள்விக்கப்பட்டது