சகரன்

இந்திய தொன்மவியல் அரசர்

சமண தொன்மங்களின்படி, சகரன் என்பவர் அஜிதநாதரின் (இரண்டாவது தீர்த்தங்கரர் ) தம்பியாவார். [1] அயோத்தியின் இச்சுவாகு வம்சத்தைச் சேர்ந்த சத்திரிய மன்னர் ஜிதசத்ரு மற்றும் ராணி விஜயந்தி (யசோமதி) ஆகியோரின் மகனாவார். [1] இந்து தொன்மங்களின்படி, சகரன் விதர்பாவின் சூரிய குலத்தின் முக்கிய மன்னர். மற்றும் சிவி நாட்டு அரச வம்சாவளியைச் சேர்ந்தவர்,[2] கிசாரி மோகன் கங்குலி மொழிபெயர்த்த மகாபாரத்ததின்படி . இவரது தாய் இளவரசி கலிண்டி, தந்தை ராஜா ஆசித் ஆவர்.

சகரன்
துணைவர்சுமதி, பத்ரா, கேசினி
குழந்தைகளின்
பெயர்கள்
அசமஞ்சா
அரசமரபுசூர்யவம்சம்
தந்தைஜீதசத்துரு
தாய்விஜயவதி (யசோமதி என்றும் அழைக்கப்படுகிறார்)

இந்து தொன்மவியல்

தொகு

இந்து சமய தொன்மத்தின்படி, சகர் ( சமசுகிருதம் : सगर ; IAST : Sagara ) விதர்பாவில் உள்ள சூரிய குலத்தின் ஒரு முக்கிய மன்னர். மற்றும் சிவியின் அரச வம்சாவளியைச் சேர்ந்தவர்.[2][3]

பகவத புராணத்தின் படி, பாகு மன்னர் தனது உறவினர்கள் செய்த துரோகத்தால் ஹேஹர்களிடம் தோற்று தனது நாட்டை இழந்து, தனது மனைவிகளுடன் வனவாசம் சென்றார். விரைவில் மன்னர் இறந்துவிடுகிறார். அப்போது ஒரு மனைவி மட்டுமே கருதரித்திருக்கிறாள். கர்ப்பிணியான மனைவி இறந்த மன்னருடன் உடன்கட்டை ஏறப் போகும்போது, ஔரவ முனிவர் அவளைத் தடுத்து காப்பாற்றினார். மன்னரின் சக மனைவிகளுக்கு அவள் கருவுற்றுரிக்கும் செய்தி கிடைத்ததும், அவர்கள் அவளுக்கு நஞ்சு கொடுத்தார்கள். அதனால் அந்த நஞ்சால் இறக்காமல் பிறந்தது. இதனால் குழந்தைக்கு சகரா (ச-உடன், கரா-நஞ்சு) என்ற பெயரிடப்பட்டது.

சகரன் வளர்ந்த பிறகு தன் தாய்வழியாக தன் வலாற்றறை அறிந்தான். பின்னர் அவன் ஹேஹர்களையும் அவரகளுக்கு உதவியவர்களையும் அழிக்க முற்பட்டான். அவர்கள் வசிட்டரிடம் சரண்டைந்தனர். அவர் சகரனிடம் சத்திரன் சரண்டைந்தால் அவன் இறந்தவனுக்கு சமம் எனவே அவர்களை ஒன்றும் செய்யாதே என்று அறிவுரை தூறி அனுப்பினார். சகரன் பின்னர் அயோத்திசென்று காசியப்பரின் மகளான சுமதியையும், விதர்ப இளவரசி கேசினியையும் மணந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி செலுத்தினான். கேசினிக்கு அசமஞ்சசனும், சுமதிக்கு 60,000 பிள்ளைகளும் பிறந்தனர்.

அசமஞ்சனின் முன்வினையால் அவன் உடலில் பிசாசு புகுந்துவுடுகிறது. இதனால் அசமஞ்சன் பலரைக் கொன்று பல கொடுமைகளை இழைக்கிறான். அதனால் சகரன் தன் மகனான அசமஞ்சனை நாடு கடத்துகிறான்.

சகரன் போரில் பல உயிர்களை அழித்த பாவம் தீர அசுவமேத யாகம் செய்கிறான். அப்போது யாக குதியையை ஒருவன் களவாடி பாதாளத்தில் தவம் செய்துகொண்டிருந்த கபிலர் ஆசிரமத்தருகில் விட்டுவிடுகிறான். குதிரையைத் தேடிவரும் சகரனின் மைந்தர்கள் 60.000 பேரும் பாதாளத்தில் குதிரை உள்ளதைக் காண்கின்றனர். அக்குதிரையை கபிலரே களவாடியதா எண்ணி அவரைத் தாக்க முற்படுகின்றனர். அதனால் கோபமுற்ற கபிலர் தன் கோபப் பார்வையால் அவர்கள் அனைவரியைம் எரித்து விடுகிறார். இதனால் சகரன் அசமஞ்சனின் மகனான அம்சுமானை குதிரையை மீட்டுவர அனுப்புகிறான். அவன் கபிலரை வணங்கி கபிலர் அவனிடம் இளவரசே குதிரையை கொண்டு சென்று வேள்வியை முடிக்கச் சொல். உன் மகன் திலீபனுக்கு பகிதரன் பிறப்பான். அவன் கங்கையை பூலோகத்துக்குக் கொண்டுவந்து உன் முன்னோர்களின் சாம்பலை அதில் கரைப்பான் என்றார்.[4]

சமண பாரம்பரியம்

தொகு
 
மன்னர் சகரனின் மகனான ஜானு நாக லோகத்தில் வெள்ளத்தைப் புகச்செய்தல்

சமண மரபில், சகரன் அஜிதநாதரின் (இரண்டாவது தீர்த்தங்கர ) தம்பி ஆவார். [1] அயோத்தியில் இச்சுவாகு வம்சத்தைச் சேர்ந்த சத்திரிய மன்னர் சுமித்ரா (ஜீதசத்துரு) மற்றும் ராணி விஜயந்தி (யசோமதி) ஆகியோருக்குப் பிறந்தார். [1] சகரன், பெரியவனாக வளர்ந்து, தனது தந்தைக்குப் பிறகு அரசாட்சியை ஏற்று சக்கரவர்த்தியாக ஆனான். சக்கரவர்த்தி கங்கைக்கரையை யடைந்து, நவநிதி என்னும் ஒன்பதுவிதமான செல்வங்களைப் பெறுவதற்காக கடுநோன்பிருந்து, நோன்பின் முடிவில் நவநிதிகள் அவரனுக்குக் கிடைத்தன. அவரது ராணிகளான சுமதி, பத்ரா. [1] அவருக்கு ராணிகளிடமிருந்து அறுபதாயிரம் அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளுக்கு சாகரர் என்பது பொதுப்பெயர். அதாவது சகரன் 'பிள்ளைகள் என்பது பொருள். இவர்களில் மூத்த மகன் பெயர் ஜானு என்பவன். ஒரு சமயம் ஜானு கங்கை ஆற்று நீரால் நாக லோகத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தான். இதனால் கோபமுற்ற நாகராசனாகிய ஜுவலனப்பிரபன் தீப்பொறி பறக்கும் தன் கண்களால் சாகரர் அறுபதினாயிரவரையும் எரிந்து சாம்பலாயினான். இதன் பின்னர் சகரன் தன் பேரனான பகீரதனை சிம்மாசனத்தில் ஏற்றிவிட்டு தவம் செய்ய சென்றுவிட்டார். [5] [6]

மாமல்லபுரம் சிற்பங்களில்

தொகு

மாமல்லபுரத்தில் உள்ள அருச்சுனன் தபசு என்று குறிப்பிடப்புடும் புடைப்புச் சிற்ப்பத் தொகுதியில் தவம் செய்பர் போலக் காணப்படுபவர் சிலர் குறிப்பிடுவதுபோல பகீரதனோ, அருச்சுனனோ அல்ல அது சகரனையே குறிக்கும் என்று அச்சிற்பங்களை விரிவாக விளக்கி மகாபலிபுரத்து ஜைன சிற்பம் என்ற தனி நூலை மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார்.

குறிப்புகள்

தொகு

 

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகரன்&oldid=3888047" இலிருந்து மீள்விக்கப்பட்டது