சூர்யவம்சம்
சூரிய வம்சம் (ஆங்கில மொழி: Suryavamsam) விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி கதை பாத்திரங்களில் சரத் குமார்,தேவயானி , ராதிகா, மணிவண்ணன், மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் பாடல்வரிகள் மு. மேத்தா, பழனி பாரதி, ர. ரவிசங்கர் மற்றும் கலை குமார் அவர்களால் எழுதப்பட்டது. இப்படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவு எஸ்.ஏ. ராஜ்குமார் அவர்கள் மூலம் இயற்றப்பட்டது.[1]
சூரிய வம்சம் Suryavamsham | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | விக்ரமன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | சரத்குமார் ராதிகா தேவயானி மணிவண்ணன் பிரியா ராமன் |
ஒளிப்பதிவு | எஸ். சரவணன் |
படத்தொகுப்பு | வி. ஜெய்சங்கர் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
விநியோகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | சூன் 27, 1997 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
கதை சுருக்கம்
தொகுசூரியவம்சம் சூன் 27, 1997 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். தந்தையாக வரும் சரத்குமாருக்கு இணையராக (ஜோடி) ராதிகா அவர்களும் மகன் பாத்திரத்திற்கு தேவயானி அவர்கள் நடித்துள்ளனர். மேலும் ஆனந்தராஜ் இத்திரைப்படத்தின் வில்லன் வேடத்திலும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் மணிவண்ணன் மற்றும் ஆர். சுந்தரராஜன் ஆகிய இருவரும் தமது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கதைமாந்தர்கள்
தொகு- சரத் குமார்- சின்னராசு/ சக்திவேல் கவுண்டர்
- தேவயானி - நந்தினி
- ராதிகா- சக்திவேல் கவுண்டரின் மனைவி லதா
- மணிவண்ணன்- சின்னராசுவின் சகதோழனாக ராசப்பன்
- பிரியா ராமன்- கௌரி
- ஜெய்கணேஷ்
- அஜய் ரத்னம்
- சத்ய பிரியா - நந்தினியின் தாய்
- ஆனந்த ராஜ் - தர்மலிங்கம்
- ராஜ குமாரன் - சிறப்பு தோற்றம்
பாடல்கள்
தொகுசூரிய வம்சம் | |
---|---|
ஒலிப்பதிவிலிருந்து சூரியவம்சம்
| |
வெளியீடு | 1997 ஆம் ஆண்டு |
இசைப் பாணி | திரைப்பட இசையமைப்பு |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | எஸ். ஏ. ராஜ்குமார் |
இசைத் தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் மூலம் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளது.[2]
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்) " | சுஜாதா | 4:12 | |
2. | "காதலா காதலா" | ஹரிஹரன், சுவர்ணலதா | 4:35 | |
3. | "சலக்கு சலக்கு" | அருன் மொழி, சுஜாதா | 4:04 | |
4. | "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (ஆண்)" | ஹரிஹரன் | 3:58 | |
5. | "நட்சத்திரச் ஜன்னலில்" | மனோ, சுனந்தா | 4:56 | |
6. | "திருநாளுத் தேரழகா" | எஸ். ஏ. ராஜ்குமார், சுஜாதா | 3:21 |
மற்ற மொழிகளில்
தொகு- இத்திரைப்படம் கன்னட மொழியில் சூர்யா வம்ஷா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது, இதில் விஷ்ணுவர்தன் மற்றும் இஷா கோபிகர் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் சீட்டுக் கூண்டு (box-office) வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்தது.
- தெலுங்கில் இப்படம் சூர்யா வம்சம் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்து. இதில் வெங்கடேஷ் மற்றும் மீனா முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
- பின்னர் இப்படம் இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மறைந்த முன்னணி நடிகைகளில் ஒருவரான சௌந்தர்யா அவர்களின் நடிப்பில், சூரியவன்ஷம் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.
ஆதாரம்
தொகு- ↑ "சூரியவம்சம் திரைப்படத்தின் வரலாறு". pluz.in. Archived from the original on 2014-07-11. பார்க்கப்பட்ட நாள் சூன் 19, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "சூரிய வம்சம் திரைப்பட இசை வரலாறு". Yahoo.com. Archived from the original on 2012-01-25. பார்க்கப்பட்ட நாள் சூன் 21, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)CS1 maint: unfit URL (link)|work=